Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௨௧

Qur'an Surah Nuh Verse 21

ஸூரத்து நூஹ் [௭௧]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِيْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗٓ اِلَّا خَسَارًاۚ (نوح : ٧١)

qāla
قَالَ
Said
கூறினார்
nūḥun
نُوحٌ
Nuh
நூஹ்
rabbi
رَّبِّ
"My Lord!
என் இறைவா!
innahum
إِنَّهُمْ
Indeed they
நிச்சயமாக அவர்கள்
ʿaṣawnī
عَصَوْنِى
disobeyed me
எனக்கு மாறுசெய்தனர்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
and followed
இன்னும் பின்பற்றினர்
man lam yazid'hu
مَن لَّمْ يَزِدْهُ
(the one) who (did) not increase him
எவன்/அதிகப்படுத்தவில்லையோ/அவனுக்கு
māluhu
مَالُهُۥ
his wealth
அவனுடைய செல்வமும்
wawaladuhu
وَوَلَدُهُۥٓ
and his children
இன்னும் அவனுடைய பிள்ளையும்
illā khasāran
إِلَّا خَسَارًا
except (in) loss
நஷ்டத்தைத் தவிர

Transliteration:

Qaala Noohur Robbi innahum 'asawnee wattaba'oo mal lam yazid hu maaluhoo wa waladuhooo illaa khasaara (QS. Nūḥ:21)

English Sahih International:

Noah said, "My Lord, indeed they have disobeyed me and followed him whose wealth and children will not increase him except in loss. (QS. Nuh, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

(பின்னும் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். தவிர, பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர். (ஸூரத்து நூஹ், வசனம் ௨௧)

Jan Trust Foundation

நூஹ் கூறினார்| “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நூஹ் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர். (வசதிபடைத்த தலைவர்களைத்தான் அவர்கள் பின்பற்றினார்கள்.)