Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧௨

Qur'an Surah Nuh Verse 12

ஸூரத்து நூஹ் [௭௧]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّكُمْ اَنْهٰرًاۗ (نوح : ٧١)

wayum'did'kum
وَيُمْدِدْكُم
And provide you
இன்னும் உங்களுக்கு உதவுவான்
bi-amwālin
بِأَمْوَٰلٍ
with wealth
செல்வங்களாலும்
wabanīna
وَبَنِينَ
and children
ஆண் பிள்ளைகளாலும்
wayajʿal
وَيَجْعَل
and make
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
jannātin
جَنَّٰتٍ
gardens
தோட்டங்களை
wayajʿal
وَيَجْعَل
and make
இன்னும் ஏற்படுத்துவான்
lakum
لَّكُمْ
for you
உங்களுக்கு
anhāran
أَنْهَٰرًا
rivers
நதிகளை

Transliteration:

Wa yumdidkum bi am waalinw wa baneena wa yaj'al lakum Jannaatinw wa yaj'al lakum anhaaraa (QS. Nūḥ:12)

English Sahih International:

And give you increase in wealth and children and provide for you gardens and provide for you rivers. (QS. Nuh, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

பொருள்களையும், மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் ஆறுகளையும் ஓட்டி வைப்பான். (ஸூரத்து நூஹ், வசனம் ௧௨)

Jan Trust Foundation

“அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான்.