குர்ஆன் ஸூரா ஸூரத்து நூஹ் வசனம் ௧
Qur'an Surah Nuh Verse 1
ஸூரத்து நூஹ் [௭௧]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّآ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ (نوح : ٧١)
- innā
- إِنَّآ
- Indeed, We
- நிச்சயமாக நாம்
- arsalnā nūḥan
- أَرْسَلْنَا نُوحًا
- [We] sent Nuh
- அனுப்பினோம்/நூஹை
- ilā qawmihi
- إِلَىٰ قَوْمِهِۦٓ
- to his people
- அவருடைய மக்களின் பக்கம்
- an andhir
- أَنْ أَنذِرْ
- that "Warn
- ஏனெனில், நீர் எச்சரிப்பீராக!
- qawmaka
- قَوْمَكَ
- your people
- உமது மக்களை
- min qabli
- مِن قَبْلِ
- from before
- முன்னர்
- an yatiyahum
- أَن يَأْتِيَهُمْ
- [that] comes to them
- அவர்களுக்கு வருவதற்கு
- ʿadhābun
- عَذَابٌ
- a punishment
- தண்டனை
- alīmun
- أَلِيمٌ
- painful"
- வலி தரக்கூடிய
Transliteration:
Innaaa arsalnaa Noohan ilaa qawmihee an anzir qawmaka min qabli any yaatiyahum 'azaabun aleem(QS. Nūḥ:1)
English Sahih International:
Indeed, We sent Noah to his people, [saying], "Warn your people before there comes to them a painful punishment." (QS. Nuh, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். (ஸூரத்து நூஹ், வசனம் ௧)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்| “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் நூஹை அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) அனுப்பினோம், ஏனெனில், நீர் உமது மக்களை வலி தரக்கூடிய தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் எச்சரிப்பீராக!