Skip to content

ஸூரா ஸூரத்து நூஹ் - Page: 3

Nuh

(Nūḥ)

௨௧

قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِيْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗٓ اِلَّا خَسَارًاۚ ٢١

qāla
قَالَ
கூறினார்
nūḥun
نُوحٌ
நூஹ்
rabbi
رَّبِّ
என் இறைவா!
innahum
إِنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
ʿaṣawnī
عَصَوْنِى
எனக்கு மாறுசெய்தனர்
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
man lam yazid'hu
مَن لَّمْ يَزِدْهُ
எவன்/அதிகப்படுத்தவில்லையோ/அவனுக்கு
māluhu
مَالُهُۥ
அவனுடைய செல்வமும்
wawaladuhu
وَوَلَدُهُۥٓ
இன்னும் அவனுடைய பிள்ளையும்
illā khasāran
إِلَّا خَسَارًا
நஷ்டத்தைத் தவிர
(பின்னும் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். தவிர, பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௧)
Tafseer
௨௨

وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًاۚ ٢٢

wamakarū
وَمَكَرُوا۟
இன்னும் சூழ்ச்சி செய்தார்கள்
makran
مَكْرًا
சூழ்ச்சி
kubbāran
كُبَّارًا
மிகப் பெரிய
பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்குச்) செய்கின்றனர். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௨)
Tafseer
௨௩

وَقَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا ەۙ وَّلَا يَغُوْثَ وَيَعُوْقَ وَنَسْرًاۚ ٢٣

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறினார்கள்
lā tadharunna
لَا تَذَرُنَّ
நீங்கள் விட்டுவிடாதீர்கள்
ālihatakum
ءَالِهَتَكُمْ
உங்கள் தெய்வங்களை
walā tadharunna
وَلَا تَذَرُنَّ
இன்னும் விட்டுவிடாதீர்கள்
waddan walā suwāʿan
وَدًّا وَلَا سُوَاعًا
வத்து/இன்னும் சுவாஃ
walā yaghūtha
وَلَا يَغُوثَ
இன்னும் யகூஸ்
wayaʿūqa
وَيَعُوقَ
இன்னும் யவூக்
wanasran
وَنَسْرًا
இன்னும் நஸ்ர்
(மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். "வத்" (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். "ஸுவாஉ" "எகூஸ்" "யஊக்" "நஸ்ர்" (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்" என்று கூறி, ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௩)
Tafseer
௨௪

وَقَدْ اَضَلُّوْا كَثِيْرًا ەۚ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا ضَلٰلًا ٢٤

waqad
وَقَدْ
திட்டமாக
aḍallū
أَضَلُّوا۟
அவர்கள் வழி கெடுத்தனர்
kathīran
كَثِيرًاۖ
பலரை
walā tazidi
وَلَا تَزِدِ
நீ அதிகப்படுத்தாதே!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
illā ḍalālan
إِلَّا ضَلَٰلًا
வழிகேட்டைத் தவிர
நிச்சயமாக பலரை வழிகெடுத்துவிட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டையன்றி நீ அதிகப்படுத்திவிடாதே!" (என்றும் பிரார்த்தித்தார்). ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௪)
Tafseer
௨௫

مِمَّا خَطِيْۤـٰٔتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا ەۙ فَلَمْ يَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا ٢٥

mimmā khaṭīātihim
مِّمَّا خَطِيٓـَٰٔتِهِمْ
அவர்களுடைய பாவங்களால்
ugh'riqū
أُغْرِقُوا۟
அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள்
fa-ud'khilū
فَأُدْخِلُوا۟
பிறகு, நுழைக்கப்பட்டார்கள்
nāran
نَارًا
நரகத்தில்
falam yajidū
فَلَمْ يَجِدُوا۟
அவர்கள் காணவில்லை
lahum
لَهُم
தங்களுக்கு
min dūni l-lahi
مِّن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
anṣāran
أَنصَارًا
உதவியாளர்களை
ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப்பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டுப், பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை. ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௫)
Tafseer
௨௬

وَقَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا ٢٦

waqāla
وَقَالَ
கூறினார்
nūḥun
نُوحٌ
நூஹ்
rabbi
رَّبِّ
என் இறைவா!
lā tadhar
لَا تَذَرْ
நீ விட்டு விடாதே!
ʿalā l-arḍi
عَلَى ٱلْأَرْضِ
பூமியில்
mina l-kāfirīna
مِنَ ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களில்
dayyāran
دَيَّارًا
வசிக்கின்ற எவரையும்
பின்னும், நூஹ் (தன் இறைவனை நோக்கி,) "என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே! ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௬)
Tafseer
௨௭

اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْٓا اِلَّا فَاجِرًا كَفَّارًا ٢٧

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
in tadharhum
إِن تَذَرْهُمْ
அவர்களை விட்டு விட்டால்
yuḍillū
يُضِلُّوا۟
வழிகெடுத்து விடுவார்கள்
ʿibādaka
عِبَادَكَ
உனது அடியார்களை
walā yalidū
وَلَا يَلِدُوٓا۟
இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள்
illā
إِلَّا
தவிர
fājiran
فَاجِرًا
பாவியை
kaffāran
كَفَّارًا
மிகப் பெரிய நிராகரிப்பாளனை
நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன்னுடைய (மற்ற) அடியார்களையும் நிச்சயமாக வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் அன்றி, (வேறெவரையும் குழந்தையாக) அவர்கள் பெற்றெடுக்கவும் மாட்டார்கள். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௭)
Tafseer
௨௮

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۗ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا ࣖ ٢٨

rabbi
رَّبِّ
என் இறைவா!
igh'fir lī
ٱغْفِرْ لِى
என்னை(யும்) மன்னிப்பாயாக!
waliwālidayya
وَلِوَٰلِدَىَّ
என் பெற்றோரையும்
waliman dakhala
وَلِمَن دَخَلَ
நுழைந்து விட்டவரையும்
baytiya
بَيْتِىَ
என் வீட்டில்
mu'minan
مُؤْمِنًا
நம்பிக்கையாளராக
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
wal-mu'mināti
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களையும்
walā tazidi
وَلَا تَزِدِ
அதிகப்படுத்தாதே!
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களுக்கு
illā tabāran
إِلَّا تَبَارًۢا
அழிவைத் தவிர
என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்த வனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே!" (என்றும் பிரார்த்தித்தார்). ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨௮)
Tafseer