اِنَّآ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّأْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ١
- innā
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- arsalnā nūḥan
- أَرْسَلْنَا نُوحًا
- அனுப்பினோம்/நூஹை
- ilā qawmihi
- إِلَىٰ قَوْمِهِۦٓ
- அவருடைய மக்களின் பக்கம்
- an andhir
- أَنْ أَنذِرْ
- ஏனெனில், நீர் எச்சரிப்பீராக!
- qawmaka
- قَوْمَكَ
- உமது மக்களை
- min qabli
- مِن قَبْلِ
- முன்னர்
- an yatiyahum
- أَن يَأْتِيَهُمْ
- அவர்களுக்கு வருவதற்கு
- ʿadhābun
- عَذَابٌ
- தண்டனை
- alīmun
- أَلِيمٌ
- வலி தரக்கூடிய
நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்முடைய) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) "நீங்கள் உங்களுடைய மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதனைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்" என்று கட்டளையிட்டோம். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧)Tafseer
قَالَ يٰقَوْمِ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ ٢
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- yāqawmi
- يَٰقَوْمِ
- என் மக்களே!
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- lakum
- لَكُمْ
- உங்களுக்கு
- nadhīrun
- نَذِيرٌ
- எச்சரிப்பாளர்
- mubīnun
- مُّبِينٌ
- தெளிவான
(அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) "என்னுடைய மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன்" என்றும், ([௭௧] ஸூரத்து நூஹ்: ௨)Tafseer
اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِيْعُوْنِۙ ٣
- ani uʿ'budū
- أَنِ ٱعْبُدُوا۟
- அதாவது, நீங்கள் வணங்குங்கள்!
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- wa-ittaqūhu
- وَٱتَّقُوهُ
- இன்னும் அவனை அஞ்சுங்கள்
- wa-aṭīʿūni
- وَأَطِيعُونِ
- இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
"அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்" என்றும், ([௭௧] ஸூரத்து நூஹ்: ௩)Tafseer
يَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرْكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّىۗ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَاۤءَ لَا يُؤَخَّرُۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ٤
- yaghfir
- يَغْفِرْ
- அவன் மன்னிப்பான்
- lakum
- لَكُم
- உங்களுக்கு
- min dhunūbikum
- مِّن ذُنُوبِكُمْ
- உங்கள் பாவங்களை
- wayu-akhir'kum
- وَيُؤَخِّرْكُمْ
- இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான்
- ilā ajalin
- إِلَىٰٓ أَجَلٍ
- தவணை வரை
- musamman
- مُّسَمًّىۚ
- குறிப்பிட்ட
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- ajala
- أَجَلَ
- தவணை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- idhā jāa
- إِذَا جَآءَ
- வந்துவிட்டால்
- lā yu-akharu
- لَا يُؤَخَّرُۖ
- அது பிற்படுத்தப்படாது
- law kuntum taʿlamūna
- لَوْ كُنتُمْ تَعْلَمُونَ
- நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
"(அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்களுடைய குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழ) விட்டுவைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது என்றும் (இதனை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?" என்றும் கூறினார். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௪)Tafseer
قَالَ رَبِّ اِنِّيْ دَعَوْتُ قَوْمِيْ لَيْلًا وَّنَهَارًاۙ ٥
- qāla
- قَالَ
- அவர் கூறினார்
- rabbi
- رَبِّ
- என் இறைவா!
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- daʿawtu
- دَعَوْتُ
- அழைத்தேன்
- qawmī
- قَوْمِى
- எனது மக்களை
- laylan
- لَيْلًا
- இரவிலும்
- wanahāran
- وَنَهَارًا
- பகலிலும்
(அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதனை மறுத்து அவரைப் புறக்கணித்துவிடவே, அவர் தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என்னுடைய மக்களை இரவு பகலாக அழைத்தேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௫)Tafseer
فَلَمْ يَزِدْهُمْ دُعَاۤءِيْٓ اِلَّا فِرَارًا ٦
- falam
- فَلَمْ
- அதிகப்படுத்தவில்லை
- yazid'hum
- يَزِدْهُمْ
- அதிகப்படுத்தவில்லை அவர்களுக்கு
- duʿāī
- دُعَآءِىٓ
- எனது அழைப்பு
- illā
- إِلَّا
- தவிர
- firāran
- فِرَارًا
- விரண்டோடுவதை
வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என்னுடைய அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை. ([௭௧] ஸூரத்து நூஹ்: ௬)Tafseer
وَاِنِّيْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْٓا اَصَابِعَهُمْ فِيْٓ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًاۚ ٧
- wa-innī
- وَإِنِّى
- நிச்சயமாக நான்
- kullamā daʿawtuhum
- كُلَّمَا دَعَوْتُهُمْ
- அவர்களை அழைத்த போதெல்லாம்
- litaghfira
- لِتَغْفِرَ
- நீ மன்னிப்பதற்காக
- lahum
- لَهُمْ
- அவர்களை
- jaʿalū
- جَعَلُوٓا۟
- ஆக்கிக் கொண்டனர்
- aṣābiʿahum
- أَصَٰبِعَهُمْ
- தங்கள் விரல்களை
- fī ādhānihim
- فِىٓ ءَاذَانِهِمْ
- தங்கள் காதுகளில்
- wa-is'taghshaw
- وَٱسْتَغْشَوْا۟
- இன்னும் மூடிக்கொண்டனர்
- thiyābahum
- ثِيَابَهُمْ
- தங்கள் ஆடைகளால்
- wa-aṣarrū
- وَأَصَرُّوا۟
- இன்னும் பிடிவாதம் பிடித்தனர்
- wa-is'takbarū
- وَٱسْتَكْبَرُوا۟
- இன்னும் பெருமையடித்தனர்
- is'tik'bāran
- ٱسْتِكْبَارًا
- பெருமையடித்தல்
நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்தபோதெல்லாம், தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களைப் புகுத்தி அடைத்துக்கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௭)Tafseer
ثُمَّ اِنِّيْ دَعَوْتُهُمْ جِهَارًاۙ ٨
- thumma innī
- ثُمَّ إِنِّى
- பிறகு/நிச்சயமாக நான்
- daʿawtuhum
- دَعَوْتُهُمْ
- அவர்களை அழைத்தேன்
- jihāran
- جِهَارًا
- உரக்க
பின்னும் நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௮)Tafseer
ثُمَّ اِنِّيْٓ اَعْلَنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًاۙ ٩
- thumma
- ثُمَّ
- பிறகு
- innī
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- aʿlantu
- أَعْلَنتُ
- வெளிப்படையாகப் பேசினேன்
- lahum
- لَهُمْ
- அவர்களிடம்
- wa-asrartu
- وَأَسْرَرْتُ
- இன்னும் இரகசியமாகப் பேசினேன்
- lahum
- لَهُمْ
- அவர்களிடம்
- is'rāran
- إِسْرَارًا
- தனியாக, இரகசியமாக பேசுதல்
அன்றி, நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௯)Tafseer
فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ اِنَّهٗ كَانَ غَفَّارًاۙ ١٠
- faqul'tu
- فَقُلْتُ
- நான் கூறினேன்
- is'taghfirū
- ٱسْتَغْفِرُوا۟
- நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்!
- rabbakum
- رَبَّكُمْ
- உங்கள் இறைவனிடம்
- innahu
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- kāna
- كَانَ
- இருக்கின்றான்
- ghaffāran
- غَفَّارًا
- மகா மன்னிப்பாளனாக
"உங்கள் இறைவனிடம் மன்னிப்பைக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்புடையவன்" என்றும் கூறினேன். ([௭௧] ஸூரத்து நூஹ்: ௧௦)Tafseer