Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் வசனம் ௪௩

Qur'an Surah Al-Ma'arij Verse 43

ஸூரத்துல் மஆரிஜ் [௭௦]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰى نُصُبٍ يُّوْفِضُوْنَۙ (المعارج : ٧٠)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yakhrujūna
يَخْرُجُونَ
they will come out
அவர்கள் வெளியேறுகின்ற
mina l-ajdāthi
مِنَ ٱلْأَجْدَاثِ
from the graves
புதைக் குழிகளில் இருந்து
sirāʿan
سِرَاعًا
rapidly
விரைவாக
ka-annahum
كَأَنَّهُمْ
as if they (were)
போல்/அவர்களோ
ilā nuṣubin
إِلَىٰ نُصُبٍ
to a goal
கம்பத்தின் பக்கம்
yūfiḍūna
يُوفِضُونَ
hastening
விரைந்து ஓடுகின்றவர்கள்

Transliteration:

Yawma yakhrujoona minal ajdaasi siraa'an ka anna hum ilaa nusubiny yoofidoon (QS. al-Maʿārij:43)

English Sahih International:

The Day they will emerge from the graves rapidly as if they were, toward an erected idol, hastening. (QS. Al-Ma'arij, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களுக்கு ஒரு நாளை நீங்கள் ஞாபகமூட்டுங்கள். சிலை வணங்குபவர்கள் தங்களுடைய திருநாள்களில் பூஜைக்காக நட்டப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள். (ஸூரத்துல் மஆரிஜ், வசனம் ௪௩)

Jan Trust Foundation

நிச்சயமாக அவர்கள் (தாங்கள் ஆராதனை செய்யும்) எல்லைக் கற்களின்பால் விரைந்து செல்பவர்களைப் போல் அந்நாளில் (தங்கள்) மண்ணறைகளிலிருந்து விரைவாக வெளியாவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகின்ற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகின்றவர்கள் போல் இருப்பார்கள்.