Skip to content

ஸூரா ஸூரத்துல் மஆரிஜ் - Page: 5

Al-Ma'arij

(al-Maʿārij)

௪௧

عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ ٤١

ʿalā an nubaddila
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ
நாம் மாற்றிக் கொண்டுவருவதற்கு
khayran
خَيْرًا
சிறந்தவர்களை
min'hum
مِّنْهُمْ
இவர்களை விட
wamā naḥnu
وَمَا نَحْنُ
நாம் அல்ல
bimasbūqīna
بِمَسْبُوقِينَ
பலவீனமானவர்கள்
(இவர்களை நீக்கி) இவர்களைவிட மேலானவர்களை மாற்றிவிடவும் (ஆற்றலுடையோம்!) இதில் நாம் இயலாதவர்களன்று. ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪௧)
Tafseer
௪௨

فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِيْ يُوْعَدُوْنَۙ ٤٢

fadharhum
فَذَرْهُمْ
ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக!
yakhūḍū
يَخُوضُوا۟
அவர்கள் ஈடுபடட்டும்!
wayalʿabū
وَيَلْعَبُوا۟
இன்னும் விளையாடட்டும்!
ḥattā
حَتَّىٰ
இறுதியாக
yulāqū
يُلَٰقُوا۟
அவர்கள் சந்திப்பார்கள் !
yawmahumu
يَوْمَهُمُ
அவர்களது நாளை
alladhī
ٱلَّذِى
எது
yūʿadūna
يُوعَدُونَ
எச்சரிக்கப்பட்டார்கள்
ஆகவே, (நபியே!) அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளை அவர்கள் சந்திக்கும் வரையில், அவர்கள் விளையாடிக்கொண்டும், (வீண் காரியங்களில்) ஆழ்ந்து கிடக்குமாறும் அவர்களை நீங்கள் விட்டுவிடுங்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪௨)
Tafseer
௪௩

يَوْمَ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ سِرَاعًا كَاَنَّهُمْ اِلٰى نُصُبٍ يُّوْفِضُوْنَۙ ٤٣

yawma
يَوْمَ
நாளில்
yakhrujūna
يَخْرُجُونَ
அவர்கள் வெளியேறுகின்ற
mina l-ajdāthi
مِنَ ٱلْأَجْدَاثِ
புதைக் குழிகளில் இருந்து
sirāʿan
سِرَاعًا
விரைவாக
ka-annahum
كَأَنَّهُمْ
போல்/அவர்களோ
ilā nuṣubin
إِلَىٰ نُصُبٍ
கம்பத்தின் பக்கம்
yūfiḍūna
يُوفِضُونَ
விரைந்து ஓடுகின்றவர்கள்
(நபியே! அவர்களுக்கு ஒரு நாளை நீங்கள் ஞாபகமூட்டுங்கள். சிலை வணங்குபவர்கள் தங்களுடைய திருநாள்களில் பூஜைக்காக நட்டப்பட்ட) கொடிகளின் பக்கம் விரைந்தோடுவதைப் போலவே, சமாதிகளிலிருந்து வெளிப்பட்டு (ஹஷ்ருடைய மைதானத்திற்கு) வெகு தீவிரமாகச் செல்வார்கள். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪௩)
Tafseer
௪௪

خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗذٰلِكَ الْيَوْمُ الَّذِيْ كَانُوْا يُوْعَدُوْنَ ࣖ ٤٤

khāshiʿatan
خَٰشِعَةً
கீழ்நோக்கி இருக்கும்
abṣāruhum
أَبْصَٰرُهُمْ
அவர்களின் பார்வைகள்
tarhaquhum
تَرْهَقُهُمْ
அவர்களை சூழ்ந்து கொள்ளும்
dhillatun
ذِلَّةٌۚ
இழிவு
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-yawmu
ٱلْيَوْمُ
நாளாகும்
alladhī kānū yūʿadūna
ٱلَّذِى كَانُوا۟ يُوعَدُونَ
எது/வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
(அந்நாளில்) பயந்த பார்வையுடன் ஓடுவார்கள். இழிவும் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (நபியே!) இந்நாள்தான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். ([௭௦] ஸூரத்துல் மஆரிஜ்: ௪௪)
Tafseer