குர்ஆன் ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா வசனம் ௧௭
Qur'an Surah Al-Haqqah Verse 17
ஸூரத்துல் ஹாஃக்ஃகா [௬௯]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَاۤىِٕهَاۗ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَىِٕذٍ ثَمٰنِيَةٌ ۗ (الحاقة : ٦٩)
- wal-malaku ʿalā arjāihā
- وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَاۚ
- And the Angels (will be) on its edges
- வானவர்கள்/அதன் ஓரங்களில் இருப்பார்கள்
- wayaḥmilu
- وَيَحْمِلُ
- and will bear
- சுமப்பார்(கள்)
- ʿarsha
- عَرْشَ
- (the) Throne
- அர்ஷை
- rabbika
- رَبِّكَ
- (of) your Lord
- உமது இறைவனின்
- fawqahum
- فَوْقَهُمْ
- above them
- தங்களுக்கு மேல்
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- that Day
- அந்நாளில்
- thamāniyatun
- ثَمَٰنِيَةٌ
- eight
- எட்டு வானவர்கள்
Transliteration:
Wal malaku 'alaaa arjaaa'ihaa; wa yahmilu 'Arsha Rabbika fawqahum yawma'izin samaaniyah(QS. al-Ḥāq̈q̈ah:17)
English Sahih International:
And the angels are at its edges. And there will bear the Throne of your Lord above them, that Day, eight [of them]. (QS. Al-Haqqah, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(நபியே!) மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றி, அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை, எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். (ஸூரத்துல் ஹாஃக்ஃகா, வசனம் ௧௭)
Jan Trust Foundation
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் தங்களுக்கு மேல் உள்ள உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் சுமப்பார்கள்.