Skip to content

ஸூரா ஸூரத்துல் ஹாஃக்ஃகா - Page: 2

Al-Haqqah

(al-Ḥāq̈q̈ah)

௧௧

اِنَّا لَمَّا طَغَا الْمَاۤءُ حَمَلْنٰكُمْ فِى الْجَارِيَةِۙ ١١

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
lammā
لَمَّا
மிக அதிகமாகிய போது
ṭaghā l-māu
طَغَا ٱلْمَآءُ
தண்ணீர்
ḥamalnākum
حَمَلْنَٰكُمْ
உங்களை ஏற்றினோம்
fī l-jāriyati
فِى ٱلْجَارِيَةِ
கப்பலில்
(நூஹ் நபி காலத்தில் ஏற்பட்ட பிரளயத்தில்) தண்ணீர் பெருக்கெடுத்த போது, நிச்சயமாக நாம் உங்(கள் மூதாதை)களைக் கப்பலில் ஏற்றி (காப்பாற்றி)க் கொண்டோம். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௧)
Tafseer
௧௨

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِيَهَآ اُذُنٌ وَّاعِيَةٌ ١٢

linajʿalahā
لِنَجْعَلَهَا
அதை ஆக்குவதற்காகவும்
lakum
لَكُمْ
உங்களுக்கு
tadhkiratan
تَذْكِرَةً
ஓர் உபதேசமாக
wataʿiyahā
وَتَعِيَهَآ
அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும்
udhunun
أُذُنٌ
செவிகள்
wāʿiyatun
وَٰعِيَةٌ
கவனித்து செவியுறுகின்ற
அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாகச் செய்வதற்கும், அதனைக் காதால் கேட்பவன் ஞாபகத்தில் வைப்பதற்கும் (அவ்வாறு செய்தோம்). ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௨)
Tafseer
௧௩

فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۙ ١٣

fa-idhā nufikha
فَإِذَا نُفِخَ
ஊதப்பட்டால்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
சூரில்
nafkhatun
نَفْخَةٌ
ஊதுதல்
wāḥidatun
وَٰحِدَةٌ
ஒரு முறை
(பலமாக) ஒரு முறை ஸூர் ஊதப்பட்டு, ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௩)
Tafseer
௧௪

وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةًۙ ١٤

waḥumilati
وَحُمِلَتِ
சுமக்கப்பட்டு
l-arḍu
ٱلْأَرْضُ
பூமி(யும்)
wal-jibālu
وَٱلْجِبَالُ
மலைகளும்
fadukkatā
فَدُكَّتَا
இரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால்
dakkatan
دَكَّةً
அடியாக
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே
பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) ஒன்றோடொன்று மோதி பலமாக அடிப்பட்டால், ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௪)
Tafseer
௧௫

فَيَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُۙ ١٥

fayawma-idhin
فَيَوْمَئِذٍ
அந்நாளில்தான்
waqaʿati
وَقَعَتِ
நிகழும்
l-wāqiʿatu
ٱلْوَاقِعَةُ
நிகழக்கூடிய நாள்
அந்நாளில்தான் யுகமுடிவின் மாபெரும் சம்பவம் நிகழும். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௫)
Tafseer
௧௬

وَانْشَقَّتِ السَّمَاۤءُ فَهِيَ يَوْمَىِٕذٍ وَّاهِيَةٌۙ ١٦

wa-inshaqqati
وَٱنشَقَّتِ
இன்னும் பிளந்து விடும்
l-samāu
ٱلسَّمَآءُ
வானம்
fahiya
فَهِىَ
அது
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
wāhiyatun
وَاهِيَةٌ
பலவீனப்பட்டு விடும்
அந்நாளில் வானம் வெடித்து, அது பலவீனமாகிவிடும். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௬)
Tafseer
௧௭

وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَاۤىِٕهَاۗ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَىِٕذٍ ثَمٰنِيَةٌ ۗ ١٧

wal-malaku ʿalā arjāihā
وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَاۚ
வானவர்கள்/அதன் ஓரங்களில் இருப்பார்கள்
wayaḥmilu
وَيَحْمِلُ
சுமப்பார்(கள்)
ʿarsha
عَرْشَ
அர்ஷை
rabbika
رَبِّكَ
உமது இறைவனின்
fawqahum
فَوْقَهُمْ
தங்களுக்கு மேல்
yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
thamāniyatun
ثَمَٰنِيَةٌ
எட்டு வானவர்கள்
(நபியே!) மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள். அன்றி, அந்நாளில் உங்கள் இறைவனின் அர்ஷை, எட்டு மலக்குகள் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டு நிற்பார்கள். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௭)
Tafseer
௧௮

يَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰى مِنْكُمْ خَافِيَةٌ ١٨

yawma-idhin
يَوْمَئِذٍ
அந்நாளில்
tuʿ'raḍūna
تُعْرَضُونَ
நீங்கள் சமர்ப்பிக்கப்படுவீர்கள்
lā takhfā
لَا تَخْفَىٰ
மறைந்துவிடாது
minkum
مِنكُمْ
உங்களிடமிருந்து
khāfiyatun
خَافِيَةٌ
மறையக்கூடியது எதுவும்
(மனிதர்களே!) அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) கொண்டு போகப்படுவீர்கள். மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்துவிடாது. ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௮)
Tafseer
௧௯

فَاَمَّا مَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَيَقُوْلُ هَاۤؤُمُ اقْرَءُوْا كِتٰبِيَهْۚ ١٩

fa-ammā man
فَأَمَّا مَنْ
ஆகவே, யார்
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டாரோ
kitābahu
كِتَٰبَهُۥ
தனது செயலேடு
biyamīnihi
بِيَمِينِهِۦ
தனது வலது கரத்தில்
fayaqūlu
فَيَقُولُ
அவர் கூறுவார்
hāumu
هَآؤُمُ
வாருங்கள்!
iq'raū
ٱقْرَءُوا۟
படியுங்கள்!
kitābiyah
كِتَٰبِيَهْ
எனது செயலேட்டை
எவனுடைய செயல்கள் எழுதப்பட்ட ஏடு அவனுடைய வலது கையில் கொடுக்கப்படுகின்றானோ அவன் (மற்றவர்களை நோக்கி மகிழ்ச்சியுடன்) "இதோ! என்னுடைய ஏடு; இதனை நீங்கள் படித்துப் பாருங்கள்" என்றும், ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௧௯)
Tafseer
௨௦

اِنِّيْ ظَنَنْتُ اَنِّيْ مُلٰقٍ حِسَابِيَهْۚ ٢٠

innī
إِنِّى
நிச்சயமாக நான்
ẓanantu
ظَنَنتُ
நம்பினேன்
annī
أَنِّى
நிச்சயமாக நான்
mulāqin
مُلَٰقٍ
சந்திப்பேன்
ḥisābiyah
حِسَابِيَهْ
எனது விசாரணையை
"நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கைச் சந்திப்பேன் என்றே நம்பியிருந்தேன்" என்றும் கூறுவான். ([௬௯] ஸூரத்துல் ஹாஃக்ஃகா: ௨௦)
Tafseer