Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௪௨

Qur'an Surah Al-Qalam Verse 42

ஸூரத்துல் கலம்; [௬௮]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ (القلم : ٦٨)

yawma
يَوْمَ
(The) Day
நாளில்
yuk'shafu
يُكْشَفُ
will be uncovered
அகற்றப்படுகின்ற
ʿan sāqin
عَن سَاقٍ
from the shin
கெண்டைக்காலை விட்டும்
wayud'ʿawna
وَيُدْعَوْنَ
and they will be called
இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்
ilā l-sujūdi
إِلَى ٱلسُّجُودِ
to prostrate
சிரம்பணிய
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
but not they will be able
ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்

Transliteration:

Yawma yukshafu 'am saaqinw wa yud'awna ilas sujoodi falaa yastatee'oon (QS. al-Q̈alam:42)

English Sahih International:

The Day the shin will be uncovered and they are invited to prostration but they [i.e., the disbelievers] will not be able, (QS. Al-Qalam, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்.) அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௪௨)

Jan Trust Foundation

கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில், (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதிருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

கெண்டைக்காலை விட்டும் அகற்றப்படுகின்ற நாளில் (-கடுமையான சோதனை நிகழ்கின்ற நாளில் அவர்களை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிய அழைக்கப்படுவார்கள். ஆனால், அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்.