குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௩௯
Qur'an Surah Al-Qalam Verse 39
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௩௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَمْ لَكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَۚ (القلم : ٦٨)
- am lakum
- أَمْ لَكُمْ
- Or (do) you have
- ?/உங்களுக்கு
- aymānun
- أَيْمَٰنٌ
- oaths
- ஒப்பந்தங்கள்
- ʿalaynā
- عَلَيْنَا
- from us
- நம்மிடம்
- bālighatun
- بَٰلِغَةٌ
- reaching
- உறுதியான
- ilā yawmi l-qiyāmati
- إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِۙ
- to (the) Day (of) the Resurrection
- மறுமை நாள் வரை
- inna lakum
- إِنَّ لَكُمْ
- That for you
- நிச்சயமாக உங்களுக்கு
- lamā taḥkumūna
- لَمَا تَحْكُمُونَ
- (is) what you judge?
- நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
Transliteration:
Am lakum aymaanun 'alainaa baalighatun ilaa yawmil qiyaamati inna lakum lamaa tahkumoon(QS. al-Q̈alam:39)
English Sahih International:
Or do you have oaths [binding] upon Us, extending until the Day of Resurrection, that indeed for you is whatever you judge? (QS. Al-Qalam, Ayah ௩௯)
Abdul Hameed Baqavi:
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரையில், நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக் கின்றோமா? (ஸூரத்துல் கலம்;, வசனம் ௩௯)
Jan Trust Foundation
அல்லது, நீங்கள் தீர்ப்புச் செய்து கொள்வதெல்லாம் கியாம நாள் வரை உங்களுக்கு நிச்சயமாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் என்று நம் உறுதி பிரமாணங்கள் உங்களிடம் இருக்கின்றனவா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)