குர்ஆன் ஸூரா ஸூரத்துல் கலம்; வசனம் ௧௭
Qur'an Surah Al-Qalam Verse 17
ஸூரத்துல் கலம்; [௬௮]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَآ اَصْحٰبَ الْجَنَّةِۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ (القلم : ٦٨)
- innā
- إِنَّا
- Indeed We
- நிச்சயமாக நாம்
- balawnāhum
- بَلَوْنَٰهُمْ
- have tried them
- அவர்களை சோதித்தோம்
- kamā balawnā
- كَمَا بَلَوْنَآ
- as We tried
- நாம் சோதித்ததுபோல்
- aṣḥāba l-janati
- أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
- (the) companions (of) the garden
- தோட்ட முடையவர்களை
- idh aqsamū
- إِذْ أَقْسَمُوا۟
- when they swore
- அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
- layaṣrimunnahā
- لَيَصْرِمُنَّهَا
- to pluck its fruit
- அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்
- muṣ'biḥīna
- مُصْبِحِينَ
- (in the) morning
- அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
Transliteration:
Innaa balawnaahum kamaa balawnaaa As-haabal jannati iz 'aqsamoo la-yasri munnahaa musbiheen(QS. al-Q̈alam:17)
English Sahih International:
Indeed, We have tried them as We tried the companions of the garden, when they swore to cut its fruit in the [early] morning (QS. Al-Qalam, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள். (ஸூரத்துல் கலம்;, வசனம் ௧௭)
Jan Trust Foundation
நிச்சயமாக நாம் தோட்டமுடையவர்களைச் சோதித்தது போலவே, நாம் அவர்களைச் சோதித்தோம். அ(த் தோட்டத்திற்குடைய)வர்கள் அதிலுள்ள கனிகளை அதிகாலையில் சென்று பறித்து விடுவோமென்று சத்தியம் செய்தார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம் தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல்.“அதிகாலையில் அவர்கள் இருக்கும் போது அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!