اَمْ لَهُمْ شُرَكَاۤءُۚ فَلْيَأْتُوْا بِشُرَكَاۤىِٕهِمْ اِنْ كَانُوْا صٰدِقِيْنَ ٤١
- am lahum
- أَمْ لَهُمْ
- இவர்களுக்கு உண்டா?
- shurakāu
- شُرَكَآءُ
- கூட்டாளிகள்
- falyatū
- فَلْيَأْتُوا۟
- அவர்கள் கொண்டு வரட்டும்
- bishurakāihim
- بِشُرَكَآئِهِمْ
- அவர்களின் அந்த கூட்டாளிகளை
- in kānū
- إِن كَانُوا۟
- அவர்கள் இருந்தால்
- ṣādiqīna
- صَٰدِقِينَ
- உண்மையாளர்களாக
அல்லது அவர்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்கள் அவர்களுக்குப் பொறுப்பாளியா? இதில் அவர்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால், அவர்கள் இணைவைத்தவைகளை(ச் சாட்சிக்காக) அழைத்து வரவும். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௧)Tafseer
يَوْمَ يُكْشَفُ عَنْ سَاقٍ وَّيُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ فَلَا يَسْتَطِيْعُوْنَۙ ٤٢
- yawma
- يَوْمَ
- நாளில்
- yuk'shafu
- يُكْشَفُ
- அகற்றப்படுகின்ற
- ʿan sāqin
- عَن سَاقٍ
- கெண்டைக்காலை விட்டும்
- wayud'ʿawna
- وَيُدْعَوْنَ
- இன்னும் அவர்கள் அழைக்கப்படுவார்கள்
- ilā l-sujūdi
- إِلَى ٱلسُّجُودِ
- சிரம்பணிய
- falā yastaṭīʿūna
- فَلَا يَسْتَطِيعُونَ
- ஆனால், அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
கெண்டைக்காலை விட்டும் திரை அகற்றப்படும் நாளை (பயந்து கொள்ளுங்கள்.) அன்றைய தினம், சிரம் பணிந்து வணங்கும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள். (அவர்களின் பாவச் சுமை அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதனால் அவ்வாறு செய்ய) அவர்களால் இயலாமல் போய்விடும். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௨)Tafseer
خَاشِعَةً اَبْصَارُهُمْ تَرْهَقُهُمْ ذِلَّةٌ ۗوَقَدْ كَانُوْا يُدْعَوْنَ اِلَى السُّجُوْدِ وَهُمْ سَالِمُوْنَ ٤٣
- khāshiʿatan
- خَٰشِعَةً
- தாழ்ந்து இருக்கும்
- abṣāruhum
- أَبْصَٰرُهُمْ
- அவர்களின் பார்வைகள்
- tarhaquhum
- تَرْهَقُهُمْ
- அவர்களை சூழும்
- dhillatun
- ذِلَّةٌۖ
- இழிவு
- waqad kānū yud'ʿawna
- وَقَدْ كَانُوا۟ يُدْعَوْنَ
- அவர்கள் அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள்
- ilā l-sujūdi wahum sālimūna
- إِلَى ٱلسُّجُودِ وَهُمْ سَٰلِمُونَ
- தொழுகைக்கு/அவர்கள் சுகமானவர்களாக இருந்தபோது
அவர்களுடைய பார்வையெல்லாம் கீழ்நோக்கி நிற்கும். இழிவு அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். (இம்மையில்) சுகமா(ன தேகத்தை உடையவர்களா)க இருந்த சமயத்தில், சிரம் பணிந்து வணங்க நிச்சயமாக அழைக்கப்பட்டனர். (எனினும், தங்கள் கர்வத்தால் அதனை நிராகரித்துவிட்டனர்.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௩)Tafseer
فَذَرْنِيْ وَمَنْ يُّكَذِّبُ بِهٰذَا الْحَدِيْثِۗ سَنَسْتَدْرِجُهُمْ مِّنْ حَيْثُ لَا يَعْلَمُوْنَۙ ٤٤
- fadharnī
- فَذَرْنِى
- என்னை(யும்) விட்டு விடுவீராக!
- waman yukadhibu
- وَمَن يُكَذِّبُ
- பொய்ப் பிப்பவர்களையும்
- bihādhā l-ḥadīthi
- بِهَٰذَا ٱلْحَدِيثِۖ
- இந்த வேதத்தை
- sanastadrijuhum
- سَنَسْتَدْرِجُهُم
- அவர்களை கொஞ்சம் கொஞ்சமாகப் பிடிப்போம்
- min ḥaythu lā yaʿlamūna
- مِّنْ حَيْثُ لَا يَعْلَمُونَ
- அவர்கள் அறியாத விதத்தில்
ஆகவே, (நீங்கள் மத்தியில் வராது) என்னையும் இவ்வசனங்களைப் பொய்யாக்கும் இவர்களையும் விட்டுவிடுங்கள். அவர்கள் அறியாத விதத்தில் அதிசீக்கிரத்தில் அவர்களைக் கஷ்டத்தில் சிக்க வைப்போம். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௪)Tafseer
وَاُمْلِيْ لَهُمْۗ اِنَّ كَيْدِيْ مَتِيْنٌ ٤٥
- wa-um'lī
- وَأُمْلِى
- நாம் தவணை அளிப்போம்
- lahum
- لَهُمْۚ
- அவர்களுக்கு
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- kaydī
- كَيْدِى
- எனது சூழ்ச்சி
- matīnun
- مَتِينٌ
- மிக பலமானது
(அவர்களுடைய பாவம் அதிகரிப்பதற்காக) அவர்களை விட்டுவைப்போம். நிச்சயமாக நம்முடைய சூழ்ச்சி மிக்க பலமானது. (அவர்கள் தப்பவே முடியாது.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௫)Tafseer
اَمْ تَسْـَٔلُهُمْ اَجْرًا فَهُمْ مِّنْ مَّغْرَمٍ مُّثْقَلُوْنَۚ ٤٦
- am tasaluhum
- أَمْ تَسْـَٔلُهُمْ
- இவர்களிடம் நீர் கேட்கின்றீரா?
- ajran
- أَجْرًا
- கூலி ஏதும்
- fahum
- فَهُم
- அவர்கள்
- min maghramin
- مِّن مَّغْرَمٍ
- கடனால்
- muth'qalūna
- مُّثْقَلُونَ
- சிரமப்படுகிறார்களா?
(நபியே!) நீங்கள் அவர்களிடம் (வரியாக) யாதேனும் கூலி கேட்கின்றீர்களா? அவ்வாறாயின் (அதற்காக அவர்கள்) பட்ட கடனில் (அல்லது அவ்வரியின் பளுவைச் சுமக்க முடியாது) அவர்கள் மூழ்கி விட்டனரா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௬)Tafseer
اَمْ عِنْدَهُمُ الْغَيْبُ فَهُمْ يَكْتُبُوْنَ ٤٧
- am ʿindahumu
- أَمْ عِندَهُمُ
- அவர்களிடம் இருக்கின்றதா?
- l-ghaybu
- ٱلْغَيْبُ
- மறைவானவை
- fahum
- فَهُمْ
- அவர்கள்
- yaktubūna
- يَكْتُبُونَ
- எழுதுகின்றனரா?
அல்லது மறைவான விஷயங்கள் (எழுதப்படும் குறிப்பு) அவர்களிடம் இருந்து, அதில் (தங்களை நல்லவர்களென) எழுதிக் கொண்டிருக்கின்றனரா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௭)Tafseer
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تَكُنْ كَصَاحِبِ الْحُوْتِۘ اِذْ نَادٰى وَهُوَ مَكْظُوْمٌۗ ٤٨
- fa-iṣ'bir
- فَٱصْبِرْ
- பொறுமை காப்பீராக!
- liḥuk'mi
- لِحُكْمِ
- தீர்ப்புக்காக
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனின்
- walā takun
- وَلَا تَكُن
- நீர் ஆகிவிடாதீர்
- kaṣāḥibi l-ḥūti
- كَصَاحِبِ ٱلْحُوتِ
- மீனுடையவரைப்போல்
- idh nādā
- إِذْ نَادَىٰ
- அவர் அழைத்த நேரத்தில்
- wahuwa
- وَهُوَ
- அவர்
- makẓūmun
- مَكْظُومٌ
- கடும் கோபமுடையவராக
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனின் கட்டளைக்காகப் பொறுத்திருங்கள். (கோபம் தாங்காது) மீன் வயிற்றில் சென்றவரை (யூனுஸை)ப் போல் நீங்களும் ஆகிவிடவேண்டாம். அவர் கோபத்தில் மூழ்கிச் சென்று (மீனால் விழுங்கப்பட்டு அதன் வயிற்றில் இருந்துகொண்டு இறைவனைப்) பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள்! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௮)Tafseer
لَوْلَآ اَنْ تَدَارَكَهٗ نِعْمَةٌ مِّنْ رَّبِّهٖ لَنُبِذَ بِالْعَرَاۤءِ وَهُوَ مَذْمُوْمٌ ٤٩
- lawlā an tadārakahu niʿ'matun
- لَّوْلَآ أَن تَدَٰرَكَهُۥ نِعْمَةٌ
- அவரை அடைந்திருக்காவிட்டால்/அருள்
- min rabbihi
- مِّن رَّبِّهِۦ
- அவருடைய இறைவனிடமிருந்து
- lanubidha
- لَنُبِذَ
- எறியப்பட்டிருப்பார்
- bil-ʿarāi
- بِٱلْعَرَآءِ
- ஒரு பெருவெளியில்
- wahuwa
- وَهُوَ
- அவர் இருந்தார்
- madhmūmun
- مَذْمُومٌ
- பழிப்பிற்குரிய வராகத்தான்
அவருடைய இறைவனின் அருள் அவரை அடையா திருப்பின், வெட்ட வெளியான (அந்த) மைதானத்தில் எறியப்பட்டு நிந்திக்கப்பட்டவராகவே இருப்பார். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௯)Tafseer
فَاجْتَبٰىهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيْنَ ٥٠
- fa-ij'tabāhu
- فَٱجْتَبَٰهُ
- பிறகு, அவரை தேர்ந்தெடுத்தான்
- rabbuhu
- رَبُّهُۥ
- அவரது இறைவன்
- fajaʿalahu
- فَجَعَلَهُۥ
- அவரை ஆக்கினான்
- mina l-ṣāliḥīna
- مِنَ ٱلصَّٰلِحِينَ
- நல்லவர்களில்
(இறைவனின் அருள் அவரை அடைந்ததால்) அவருடைய இறைவன் அவரை (மன்னித்துத்) தேர்ந்தெடுத்து, அவரை நல்லவர்களிலும் ஆக்கி வைத்தான். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫௦)Tafseer