Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Page: 4

Al-Qalam

(al-Q̈alam)

௩௧

قَالُوْا يٰوَيْلَنَآ اِنَّا كُنَّا طٰغِيْنَ ٣١

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yāwaylanā
يَٰوَيْلَنَآ
எங்களின் நாசமே!
innā kunnā
إِنَّا كُنَّا
நிச்சயமாக நாங்கள் இருந்தோம்
ṭāghīna
طَٰغِينَ
வரம்பு மீறியவர்களாக
"நிச்சயமாக நாங்கள் வரம்பு மீறிவிட்டோம்; எங்களுக்குக் கேடுதான்" என்று அவர்கள் கூறி, ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௧)
Tafseer
௩௨

عَسٰى رَبُّنَآ اَنْ يُّبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ اِنَّآ اِلٰى رَبِّنَا رَاغِبُوْنَ ٣٢

ʿasā
عَسَىٰ
கூடும்
rabbunā
رَبُّنَآ
எங்கள் இறைவன்
an yub'dilanā
أَن يُبْدِلَنَا
எங்களுக்கு பகரமாக தர(க்கூடும்)
khayran
خَيْرًا
சிறந்ததை
min'hā
مِّنْهَآ
அதை விட
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbinā
رَبِّنَا
எங்கள் இறைவன்
rāghibūna
رَٰغِبُونَ
ஆசை உள்ளவர்கள்
"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனையே நோக்கு கின்றோம். எங்கள் இறைவன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தரக்கூடும்" (என்றும் கூறினார்கள்.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௨)
Tafseer
௩௩

كَذٰلِكَ الْعَذَابُۗ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَ ࣖ ٣٣

kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறுதான்
l-ʿadhābu
ٱلْعَذَابُۖ
தண்டனை
walaʿadhābu
وَلَعَذَابُ
தண்டனை
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
akbaru
أَكْبَرُۚ
மிகப் பெரியது
law kānū
لَوْ كَانُوا۟
அவர்கள் இருக்க வேண்டுமே!
yaʿlamūna
يَعْلَمُونَ
அறிந்தவர்களாக
(நபியே! உங்களை நிராகரிக்கும் இவர்களுக்கும்) இத்தகைய வேதனைதான் கிடைக்கும். மறுமையிலுள்ள வேதனையோ (இதனைவிட) மிகப் பெரிது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௩)
Tafseer
௩௪

اِنَّ لِلْمُتَّقِيْنَ عِنْدَ رَبِّهِمْ جَنّٰتِ النَّعِيْمِ ٣٤

inna lil'muttaqīna
إِنَّ لِلْمُتَّقِينَ
நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு
ʿinda rabbihim
عِندَ رَبِّهِمْ
தங்கள் இறைவனிடம்
jannāti
جَنَّٰتِ
சொர்க்கங்கள்
l-naʿīmi
ٱلنَّعِيمِ
இன்பம் நிறைந்த
நிச்சயமாக, இறை அச்சமுடையவர்களுக்கு, தங்கள் இறைவனிடத்தில் மிக்க இன்பம் தரும் சுவனபதிகளும் உண்டு. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௪)
Tafseer
௩௫

اَفَنَجْعَلُ الْمُسْلِمِيْنَ كَالْمُجْرِمِيْنَۗ ٣٥

afanajʿalu
أَفَنَجْعَلُ
ஆக்குவோமா?
l-mus'limīna
ٱلْمُسْلِمِينَ
முற்றிலும் பணிந்தவர்களை
kal-muj'rimīna
كَٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளைப் போல்
(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௫)
Tafseer
௩௬

مَا لَكُمْۗ كَيْفَ تَحْكُمُوْنَۚ ٣٦

mā lakum
مَا لَكُمْ
உங்களுக்கு என்ன ஆனது
kayfa
كَيْفَ
எப்படி
taḥkumūna
تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்
உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இருவரும் சமமென) எவ்வாறு, தீர்ப்பு அளிக்கின்றீர்கள்? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௬)
Tafseer
௩௭

اَمْ لَكُمْ كِتٰبٌ فِيْهِ تَدْرُسُوْنَۙ ٣٧

am lakum
أَمْ لَكُمْ
?/உங்களுக்கு
kitābun
كِتَٰبٌ
வேதம்
fīhi
فِيهِ
அதில்
tadrusūna
تَدْرُسُونَ
படிக்கின்றீர்களா
அல்லது உங்களிடம் (ஏதும்) வேத நூல் இருக்கின்றதா? அதில் நீங்கள் (இவ்விருவரும் சமமெனப்) படித்திருக்கின்றீர்களா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௭)
Tafseer
௩௮

اِنَّ لَكُمْ فِيْهِ لَمَا تَخَيَّرُوْنَۚ ٣٨

inna
إِنَّ
நிச்சயமாக
lakum fīhi
لَكُمْ فِيهِ
உங்களுக்கு/அதில்
lamā takhayyarūna
لَمَا تَخَيَّرُونَ
நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?
நீங்கள் விரும்பியதெல்லாம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்குமென்று அதில் இருக்கின்றதா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௮)
Tafseer
௩௯

اَمْ لَكُمْ اَيْمَانٌ عَلَيْنَا بَالِغَةٌ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِۙ اِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُوْنَۚ ٣٩

am lakum
أَمْ لَكُمْ
?/உங்களுக்கு
aymānun
أَيْمَٰنٌ
ஒப்பந்தங்கள்
ʿalaynā
عَلَيْنَا
நம்மிடம்
bālighatun
بَٰلِغَةٌ
உறுதியான
ilā yawmi l-qiyāmati
إِلَىٰ يَوْمِ ٱلْقِيَٰمَةِۙ
மறுமை நாள் வரை
inna lakum
إِنَّ لَكُمْ
நிச்சயமாக உங்களுக்கு
lamā taḥkumūna
لَمَا تَحْكُمُونَ
நீங்கள் தீர்ப்பளிப்பதெல்லாம்
அல்லது நீங்கள் கட்டளையிடுவதெல்லாம் மறுமை நாள் வரையில், நிச்சயமாக உங்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்குமென்று நாம் உங்களுக்கு சத்தியம் செய்து கொடுத்திருக் கின்றோமா? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௯)
Tafseer
௪௦

سَلْهُمْ اَيُّهُمْ بِذٰلِكَ زَعِيْمٌۚ ٤٠

salhum
سَلْهُمْ
அவர்களிடம் கேட்பீராக
ayyuhum
أَيُّهُم
அவர்களில் யார்
bidhālika
بِذَٰلِكَ
இதற்கு
zaʿīmun
زَعِيمٌ
பொறுப்பாளர்
(நபியே!) அவர்களை நோக்கி நீங்கள் கேளுங்கள்: "(அவ்வாறாயின்) இதற்கு அவர்களுக்கு யார் பொறுப்பாளி? ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪௦)
Tafseer