Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Page: 3

Al-Qalam

(al-Q̈alam)

௨௧

فَتَنَادَوْا مُصْبِحِيْنَۙ ٢١

fatanādaw
فَتَنَادَوْا۟
ஒருவரை ஒருவர் அழைத்தனர்
muṣ'biḥīna
مُصْبِحِينَ
அவர்கள் அதிகாலையில் ஆனவுடன்
(அதனை அறியாத தோட்டக்காரர்கள்) விடியற்காலையில் ஒருவருக்கொருவர் சப்தமிட்டு அழைத்து, ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௧)
Tafseer
௨௨

اَنِ اغْدُوْا عَلٰى حَرْثِكُمْ اِنْ كُنْتُمْ صَارِمِيْنَ ٢٢

ani igh'dū
أَنِ ٱغْدُوا۟
காலையில் செல்லுங்கள்
ʿalā ḥarthikum
عَلَىٰ حَرْثِكُمْ
உங்கள் விவசாய நிலத்திற்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣārimīna
صَٰرِمِينَ
அறுவடை செய்பவர்களாக
"நீங்கள் விளைச்சலை அறுப்பதாயிருந்தால், அதனை அறுவடை செய்ய உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்" (என்றும் கூறிக்கொண்டார்கள்). ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௨)
Tafseer
௨௩

فَانْطَلَقُوْا وَهُمْ يَتَخَافَتُوْنَۙ ٢٣

fa-inṭalaqū
فَٱنطَلَقُوا۟
சென்றனர்
wahum yatakhāfatūna
وَهُمْ يَتَخَٰفَتُونَ
அவர்கள்/ தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக
(தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டே சென்றார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௩)
Tafseer
௨௪

اَنْ لَّا يَدْخُلَنَّهَا الْيَوْمَ عَلَيْكُمْ مِّسْكِيْنٌۙ ٢٤

an lā yadkhulannahā
أَن لَّا يَدْخُلَنَّهَا
அதில் நுழைந்து விடக்கூடாது
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
ʿalaykum
عَلَيْكُم
உங்களிடம்
mis'kīnun
مِّسْكِينٌ
ஏழை ஒருவரும்
(யாசகம் கேட்கக்கூடிய) யாதொரு ஏழை உங்களிடம் இன்றைய தினம் அதில் நுழைந்து வராதிருக்கவும் (என்று மெதுவாகப் பேசிக்கொண்டார்கள்.) ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௪)
Tafseer
௨௫

وَّغَدَوْا عَلٰى حَرْدٍ قَادِرِيْنَ ٢٥

waghadaw
وَغَدَوْا۟
இன்னும் காலையில் புறப்பட்டனர்
ʿalā ḥardin
عَلَىٰ حَرْدٍ
ஒரு கெட்ட எண்ணத்துடன்
qādirīna
قَٰدِرِينَ
சக்தி உள்ளவர்களாக
தங்களுடைய எண்ணத்தில் (தங்களுடன் ஒரு ஏழையும் வராது) தடுத்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, அதிகாலையில் சென்றார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௫)
Tafseer
௨௬

فَلَمَّا رَاَوْهَا قَالُوْٓا اِنَّا لَضَاۤلُّوْنَۙ ٢٦

falammā ra-awhā
فَلَمَّا رَأَوْهَا
அவர்கள் அதைப் பார்த்த போது
qālū
قَالُوٓا۟
கூறினார்கள்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
laḍāllūna
لَضَآلُّونَ
வழிதவறி விட்டோம்
(சென்று) அதனைப் பார்க்கவே, (விளைச்ச லெல்லாம் அழிந்து போயிருப்பதைக் கண்டு "இது நம்முடையதல்ல; வேறொருவருடைய தோட்டத்திற்கு) நிச்சயமாக நாம் வழிதவறியே வந்துவிட்டோம்" என்றார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௬)
Tafseer
௨௭

بَلْ نَحْنُ مَحْرُوْمُوْنَ ٢٧

bal
بَلْ
இல்லை, மாறாக
naḥnu
نَحْنُ
நாங்கள்
maḥrūmūna
مَحْرُومُونَ
இழப்பிற்குள்ளாகி விட்டோம்
(பின்னர், அதனைத் தங்களுடைய தோட்டம்தான் என்று அறிந்து) அல்ல. நாம்தாம் நம்முடைய பலன்களை இழந்து விட்டோம் (என்று கூறினார்கள்). ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௭)
Tafseer
௨௮

قَالَ اَوْسَطُهُمْ اَلَمْ اَقُلْ لَّكُمْ لَوْلَا تُسَبِّحُوْنَ ٢٨

qāla
قَالَ
கூறினார்
awsaṭuhum
أَوْسَطُهُمْ
அவர்களில் நீதவான்
alam aqul lakum
أَلَمْ أَقُل لَّكُمْ
நான் உங்களுக்கு கூறவில்லையா?
lawlā tusabbiḥūna
لَوْلَا تُسَبِّحُونَ
நீங்கள் இன்ஷா அல்லாஹ் என்று சொல்லி இருக்க வேண்டாமா
அவர்களிலுள்ள ஒரு நடுநிலையாளன் அவர்களை நோக்கி "(அடிக்கடி) நான் உங்களுக்குக் கூறவில்லையா? (நான் கூறியபடி) நீங்கள் (இறைவனைத்) துதிசெய்து கொண்டிருக்க வேண்டாமா?" என்று கூறினார். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௮)
Tafseer
௨௯

قَالُوْا سُبْحٰنَ رَبِّنَآ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ ٢٩

qālū
قَالُوا۟
கூறினார்கள்
sub'ḥāna
سُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
rabbinā
رَبِّنَآ
எங்கள் இறைவன்
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
kunnā
كُنَّا
நாங்கள்ஆகிவிட்டோம்
ẓālimīna
ظَٰلِمِينَ
அநியாயக்காரர்களாக
அதற்கவர்கள் "எங்கள் இறைவனே! நீ மிக்க பரிசுத்த மானவன்; நிச்சயமாக நாங்கள்தாம் (எங்களுக்கு) தீங்கிழைத்துக் கொண்டோம்" என்று கூறி, ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௯)
Tafseer
௩௦

فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَلَاوَمُوْنَ ٣٠

fa-aqbala
فَأَقْبَلَ
முன்னோக்கினர்
baʿḍuhum
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
ʿalā baʿḍin
عَلَىٰ بَعْضٍ
சிலரை
yatalāwamūna
يَتَلَٰوَمُونَ
அவர்களுக்குள் பழித்தவர்களாக
பின்னர், அவர்களில் ஒருவர் மற்றொருவரை நோக்கி, ஒருவர் மற்றவரை நிந்தனை செய்து கொண்டனர். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩௦)
Tafseer