Skip to content

ஸூரா ஸூரத்துல் கலம்; - Page: 2

Al-Qalam

(al-Q̈alam)

௧௧

هَمَّازٍ مَّشَّاۤءٍۢ بِنَمِيْمٍۙ ١١

hammāzin
هَمَّازٍ
அதிகம் புறம் பேசுபவன்
mashāin binamīmin
مَّشَّآءٍۭ بِنَمِيمٍ
அதிகம் கோள் சொல்பவன்
(அவன்) தொடர்ந்து (புறம்பேசிக்) குற்றம்கூறி, கோள் சொல்வதையே தொழிலாகக் கொண்டு திரிபவன். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௧)
Tafseer
௧௨

مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ اَثِيْمٍۙ ١٢

mannāʿin
مَّنَّاعٍ
அதிகம் தடுப்பவன்
lil'khayri
لِّلْخَيْرِ
நன்மையை
muʿ'tadin
مُعْتَدٍ
வரம்பு மீறி
athīmin
أَثِيمٍ
பெரும் பாவி
(அவன்) எப்போதுமே நன்மையான காரியங்களைத் தடை செய்யும் வரம்பு மீறிய பெரும் பாவி; ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௨)
Tafseer
௧௩

عُتُلٍّۢ بَعْدَ ذٰلِكَ زَنِيْمٍۙ ١٣

ʿutullin
عُتُلٍّۭ
அசிங்கமானவன்
baʿda
بَعْدَ
பிறகு
dhālika
ذَٰلِكَ
இதற்கு
zanīmin
زَنِيمٍ
ஈனன்
கடின சுபாவமுள்ளவன். இவ்வளவெல்லாம் இருந்தும் ஜாதியிலும் ஈனன். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௩)
Tafseer
௧௪

اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِيْنَۗ ١٤

an kāna
أَن كَانَ
இருந்த காரணத்தால்
dhā mālin
ذَا مَالٍ
செல்வ(மு)ம் உடையவனாக
wabanīna
وَبَنِينَ
ஆண் பிள்ளைகளும்
ஏதோ சந்ததிகளும், பொருள்களும் (அவனுக்கு) இருக்கின்றது என்பதற்காக (அவன் கர்வம்கொண்டு), ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௪)
Tafseer
௧௫

اِذَا تُتْلٰى عَلَيْهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَۗ ١٥

idhā tut'lā
إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhi
عَلَيْهِ
அவன் மீது
āyātunā
ءَايَٰتُنَا
நமது வசனங்கள்
qāla
قَالَ
கூறுகின்றான்
asāṭīru
أَسَٰطِيرُ
கட்டுக் கதைகள்
l-awalīna
ٱلْأَوَّلِينَ
முன்னோரின்
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௫)
Tafseer
௧௬

سَنَسِمُهٗ عَلَى الْخُرْطُوْمِ ١٦

sanasimuhu
سَنَسِمُهُۥ
விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்
ʿalā l-khur'ṭūmi
عَلَى ٱلْخُرْطُومِ
மூக்கின் மீது
(என்றென்றும் இருக்கக்கூடியவாறும், அனைவரும் அறியக்கூடியவாறும்) அவனுடைய மூக்கில் அதிசீக்கிரத்தில் ஒரு அடையாளமிடுவோம். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௬)
Tafseer
௧௭

اِنَّا بَلَوْنٰهُمْ كَمَا بَلَوْنَآ اَصْحٰبَ الْجَنَّةِۚ اِذْ اَقْسَمُوْا لَيَصْرِمُنَّهَا مُصْبِحِيْنَۙ ١٧

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
balawnāhum
بَلَوْنَٰهُمْ
அவர்களை சோதித்தோம்
kamā balawnā
كَمَا بَلَوْنَآ
நாம் சோதித்ததுபோல்
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
தோட்ட முடையவர்களை
idh aqsamū
إِذْ أَقْسَمُوا۟
அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!
layaṣrimunnahā
لَيَصْرِمُنَّهَا
அதை அவர்கள் நிச்சயமாக அறுவடை செய்ய வேண்டும்
muṣ'biḥīna
مُصْبِحِينَ
அவர்கள் அதிகாலையில் இருக்கும் போது
(யமன் நாட்டில் வசித்த) தோப்பின் சொந்தக்காரர்களை நாம் சோதித்தவாறே (மக்காவாசிகளாகிய) இவர்களையும், (ஆறு ஆண்டுகள் பஞ்சத்தைக் கொண்டு) நிச்சயமாக நாம் சோதித்தோம். (அத்தோப்புடையவர்கள்) அதிலுள்ள விளைச்சலை (மறுநாள்) அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோம் என்று சத்தியம் செய்தார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௭)
Tafseer
௧௮

وَلَا يَسْتَثْنُوْنَ ١٨

walā yastathnūna
وَلَا يَسْتَثْنُونَ
அவர்கள் அல்லாஹ் நாடினால் என்று கூறவில்லை
எனினும், (இன்ஷா அல்லாஹ்) "இறைவன் அருள் புரிந்தால்" என்று கூறவில்லை. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௮)
Tafseer
௧௯

فَطَافَ عَلَيْهَا طَاۤىِٕفٌ مِّنْ رَّبِّكَ وَهُمْ نَاۤىِٕمُوْنَ ١٩

faṭāfa
فَطَافَ
இரவில் சுற்றியது
ʿalayhā
عَلَيْهَا
அதன் மீது
ṭāifun
طَآئِفٌ
ஒரு கட்டளை
min rabbika
مِّن رَّبِّكَ
உமது இறைவனிடமிருந்து
wahum nāimūna
وَهُمْ نَآئِمُونَ
அவர்கள் தூங்கியவர்களாக இருந்த போது
ஆகவே, அவர்கள் நித்திரையில் ஆழ்ந்து கிடக்கும்போதே உங்களது இறைவனின் புறத்தால் ஓர் ஆபத்து (வந்து) அத்தோட்டத்தைத் துடைத்து (அழித்து) விட்டது. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௯)
Tafseer
௨௦

فَاَصْبَحَتْ كَالصَّرِيْمِۙ ٢٠

fa-aṣbaḥat
فَأَصْبَحَتْ
ஆகிவிட்டது
kal-ṣarīmi
كَٱلصَّرِيمِ
அது கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று
பயிர்களையெல்லாம் வேருடன் களைந்துவிட்ட மாதிரி (அது அழிந்து) போயிற்று. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨௦)
Tafseer