௧
نۤ ۚوَالْقَلَمِ وَمَا يَسْطُرُوْنَۙ ١
- noon wal-qalami
- نٓۚ وَٱلْقَلَمِ
- நூன்/எழுது கோல் மீது(ம்) சத்தியமாக!
- wamā yasṭurūna
- وَمَا يَسْطُرُونَ
- இன்னும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும்
நூன். எழுதுகோலின் மீதும் (அதனைக் கொண்டு) அவர்கள் எதை எழுதுகிறார்களோ அதன்மீதும் சத்தியமாக! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧)Tafseer
௨
مَآ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ٢
- mā anta
- مَآ أَنتَ
- நீர் இல்லை
- biniʿ'mati
- بِنِعْمَةِ
- அருளால்
- rabbika
- رَبِّكَ
- உமது இறைவனின்
- bimajnūnin
- بِمَجْنُونٍ
- பைத்தியக்காரராக
(நபியே!) நீங்கள் உங்களது இறைவனருளால் பைத்தியக்காரரல்ல. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௨)Tafseer
௩
وَاِنَّ لَكَ لَاَجْرًا غَيْرَ مَمْنُوْنٍۚ ٣
- wa-inna
- وَإِنَّ
- நிச்சயமாக
- laka
- لَكَ
- உமக்கு
- la-ajran
- لَأَجْرًا
- நற்கூலி உண்டு
- ghayra mamnūnin
- غَيْرَ مَمْنُونٍ
- முடிவற்ற
நிச்சயமாக உங்களுக்கு முடிவுறாத (நீடித்த) கூலி இருக்கின்றது. ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௩)Tafseer
௪
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ٤
- wa-innaka
- وَإِنَّكَ
- நிச்சயமாக நீர்
- laʿalā khuluqin
- لَعَلَىٰ خُلُقٍ
- நற்குணத்தில்
- ʿaẓīmin
- عَظِيمٍ
- மகத்தான
நிச்சயமாக நீங்கள் மகத்தான நற் குணமுடையவராகவே இருக்கின்றீர்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௪)Tafseer
௫
فَسَتُبْصِرُ وَيُبْصِرُوْنَۙ ٥
- fasatub'ṣiru
- فَسَتُبْصِرُ
- விரைவில் நீரும் காண்பீர்
- wayub'ṣirūna
- وَيُبْصِرُونَ
- அவர்களும் காண்பார்கள்
"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௫)Tafseer
௬
بِاَيِّىكُمُ الْمَفْتُوْنُ ٦
- bi-ayyikumu
- بِأَييِّكُمُ
- உங்களில் யார்
- l-maftūnu
- ٱلْمَفْتُونُ
- சோதிக்கப்பட்டவர்
"உங்களில் யார் பைத்தியக்காரர்" என்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்; அவர்களும் கண்டுகொள்வார்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௬)Tafseer
௭
اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖۖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ٧
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- rabbaka
- رَبَّكَ
- உமது இறைவன்
- huwa
- هُوَ
- அவன்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- biman ḍalla
- بِمَن ضَلَّ
- வழிதவறியவனை
- ʿan sabīlihi
- عَن سَبِيلِهِۦ
- அவனது பாதையில் இருந்து
- wahuwa
- وَهُوَ
- அவன்தான்
- aʿlamu
- أَعْلَمُ
- மிக அறிந்தவன்
- bil-muh'tadīna
- بِٱلْمُهْتَدِينَ
- நேர்வழி பெற்றவர்களை(யும்)
நிச்சயமாக உங்களது இறைவன் அவன் வழியிலிருந்து தவறியவர் யார் என்பதையும் நன்கறிவான். நேரான வழியில் செல்பவர்களையும் அவன் நன்கறிவான். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௭)Tafseer
௮
فَلَا تُطِعِ الْمُكَذِّبِيْنَ ٨
- falā tuṭiʿi
- فَلَا تُطِعِ
- ஆகவே, நீர் கீழ்ப்படியாதீர்
- l-mukadhibīna
- ٱلْمُكَذِّبِينَ
- பொய்ப்பிப்பவர்களுக்கு
ஆகவே, (நபியே!) இப்பொய்யர்களை நீங்கள் பின்பற்றாதீர்கள்! ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௮)Tafseer
௯
وَدُّوْا لَوْ تُدْهِنُ فَيُدْهِنُوْنَۚ ٩
- waddū
- وَدُّوا۟
- ஆசைப்படுகின்றனர்
- law tud'hinu
- لَوْ تُدْهِنُ
- நீர் அனுசரித்து போகவேண்டும் என்று
- fayud'hinūna
- فَيُدْهِنُونَ
- அப்படியென்றால் அவர்களும் அனுசரிப்பார்கள்
(கடமையை நிறைவேற்றுவதில்) நீங்கள் அலுத்து(ச் சலித்தால்) அவர்களும் சலித்து (உங்களை விட்டு) விலகிவிடவே விரும்புகின்றனர். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௯)Tafseer
௧௦
وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِيْنٍۙ ١٠
- walā tuṭiʿ
- وَلَا تُطِعْ
- நீர் கீழ்ப்படியாதீர்!
- kulla
- كُلَّ
- எவருக்கும்
- ḥallāfin
- حَلَّافٍ
- அதிகம் சத்தியம் செய்கின்றவன்
- mahīnin
- مَّهِينٍ
- அற்பமானவன்
(நபியே! எடுத்ததற்கெல்லாம்) சத்தியம் செய்யும் அந்த அர்ப்பமானவனுக்கு நீங்கள் வழிப்படாதீர்கள். ([௬௮] ஸூரத்துல் கலம்;: ௧௦)Tafseer