Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௮

Qur'an Surah Al-Mulk Verse 8

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِۗ كُلَّمَآ اُلْقِيَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ نَذِيْرٌۙ (الملك : ٦٧)

takādu
تَكَادُ
It almost
அது நெருங்கிவிடும்
tamayyazu
تَمَيَّزُ
bursts
தெரித்துவிட
mina l-ghayẓi
مِنَ ٱلْغَيْظِۖ
with rage
கோபத்தால்
kullamā ul'qiya
كُلَّمَآ أُلْقِىَ
Every time is thrown
எறியப்படும் போதெல்லாம்
fīhā
فِيهَا
therein
அதில்
fawjun
فَوْجٌ
a group
ஒரு கூட்டம்
sa-alahum
سَأَلَهُمْ
will ask them
அவர்களிடம் கேட்பார்(கள்)
khazanatuhā
خَزَنَتُهَآ
its keepers
அதன் காவலாளிகள்
alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
"Did not come to you
உங்களிடம் வரவில்லையா?
nadhīrun
نَذِيرٌ
a warner?"
ஓர் எச்சரிப்பாளர்

Transliteration:

Takaadu tamayyazu minal ghaizi kullamaaa uliqya feehaa fawjun sa alahum khazanatuhaaa alam yaatikum nazeer (QS. al-Mulk:8)

English Sahih International:

It almost bursts with rage. Every time a company is thrown into it, its keepers ask them, "Did there not come to you a warner?" (QS. Al-Mulk, Ayah ௮)

Abdul Hameed Baqavi:

அதில் ஒரு கூட்டத்தினரை எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி ("இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா" என்று கேட்பார்கள். (ஸூரத்துல் முல்க், வசனம் ௮)

Jan Trust Foundation

அது கோபத்தால் வெடித்து விடவும் நெருங்குகிறது; அதில் ஒவ்வொரு கூட்டமும் போடப்படும் போதெல்லாம், “அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களைக் கேட்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-நரகம் நிராகரிப்பாளர்களின் மீதுள்ள) கோபத்தால் தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள்.