Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௩௦

Qur'an Surah Al-Mulk Verse 30

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَاۤؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّأْتِيْكُمْ بِمَاۤءٍ مَّعِيْنٍ ࣖ (الملك : ٦٧)

qul
قُلْ
Say
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُمْ
"Have you seen
அறிவியுங்கள்
in aṣbaḥa
إِنْ أَصْبَحَ
if becomes
சென்று விட்டால்
māukum
مَآؤُكُمْ
your water
உங்கள் தண்ணீர்
ghawran faman
غَوْرًا فَمَن
sunken then who
ஆழத்தில்/யார்
yatīkum bimāin
يَأْتِيكُم بِمَآءٍ
could bring you water
உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்
maʿīnin
مَّعِينٍۭ
flowing?"
மதுரமான

Transliteration:

Qul ara'aytum in asbaha maaa'ukum ghawran famai yaateekum bimaaa'im ma'een (QS. al-Mulk:30)

English Sahih International:

Say, "Have you considered: if your water was to become sunken [into the earth], then who could bring you flowing water?" (QS. Al-Mulk, Ayah ௩௦)

Abdul Hameed Baqavi:

(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? (ஸூரத்துல் முல்க், வசனம் ௩௦)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் இறைக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை அறிவியுங்கள்.