Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௯

Qur'an Surah Al-Mulk Verse 29

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (الملك : ٦٧)

qul
قُلْ
Say
கூறுவீராக!
huwa
هُوَ
"He
அவன்தான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
(is) the Most Gracious;
பேரருளாளன்
āmannā
ءَامَنَّا
we believe
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
in Him
அவனை
waʿalayhi
وَعَلَيْهِ
and upon Him
இன்னும் அவன் மீதே
tawakkalnā
تَوَكَّلْنَاۖ
we put (our) trust
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
So soon you will know
விரைவில் அறிவீர்கள்
man huwa fī ḍalālin
مَنْ هُوَ فِى ضَلَٰلٍ
who (is) it (that is) in error
வழிகேட்டில் உள்ளவர்களை
mubīnin
مُّبِينٍ
clear"
தெளிவான

Transliteration:

Qul huwar rahmaanu aamannaa bihee wa 'alaihi tawakkalnaa fasata'lamoona man huwa fee dalaalim mubeen (QS. al-Mulk:29)

English Sahih International:

Say, "He is the Most Merciful; we have believed in Him, and upon Him we have relied. And you will [come to] know who it is that is in clear error." (QS. Al-Mulk, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கின்றோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்." (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௯)

Jan Trust Foundation

(நபியே!) நீர் கூறும்| (எங்களைக் காப்பவன்) அவனே - அர்ரஹ்மான்; அவன் மீதே நாங்கள் ஈமான் கொண்டோம்; மேலும் அவனையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம் - எனவே, வெகு சீக்கிரத்தில் பகிரங்கமான வழி கேட்டிலிருப்பவர் யார் என்பதை நீங்கள் அறிவீர்கள்!”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) கூறுவீராக! அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவன் மீதே நாங்கள் “தவக்குல்” நம்பிக்கை வைத்தோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர்களை விரைவில் அறிவீர்கள்.