Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௭

Qur'an Surah Al-Mulk Verse 27

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْۤـَٔتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ (الملك : ٦٧)

falammā ra-awhu
فَلَمَّا رَأَوْهُ
But when they (will) see it
அவர்கள் அதை பார்க்கின்றபோது
zul'fatan
زُلْفَةً
approaching
மிக நெருக்கமாக
sīat
سِيٓـَٔتْ
(will be) distressed
கெட்டுவிடும்
wujūhu
وُجُوهُ
(the) faces
முகங்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
(of) those who disbelieved
நிராகரித்தவர்களின்
waqīla
وَقِيلَ
and it will be said
இன்னும் கூறப்படும்
hādhā
هَٰذَا
"This
இதுதான்
alladhī
ٱلَّذِى
(is) that which
எதை
kuntum
كُنتُم
you used (to)
நீங்கள் இருந்தீர்களோ
bihi
بِهِۦ
for it
அதை
taddaʿūna
تَدَّعُونَ
call"
தேடுபவர்களாக

Transliteration:

Falaammaa ra-awhu zulfatan seee'at wujoohul lazeena kafaroo wa qeela haazal lazee kuntum bihee tadda'oon (QS. al-Mulk:27)

English Sahih International:

But when they see it approaching, the faces of those who disbelieve will be distressed, and it will be said, "This is that for which you used to call." (QS. Al-Mulk, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(நீங்கள் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (அன்றி, அவர்களை நோக்கி) "நீங்கள் (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்" என்றும் கூறப்படும். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௭)

Jan Trust Foundation

எனவே, அது நெருங்கி வருவதை அவர்கள் காணும் போது நிராகரிப்போரின் முகங்கள் (நிறம் பேதலித்துக்) கெட்டுவிடும்; இன்னும், “நீங்கள் எதை வேண்டிக் கொண்டிருந்தீர்களோ, அது இது தான்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் அதை மிக நெருக்கமாக (-சமீபமாக) பார்க்கின்றபோது நிராகரித்தவர்களின் முகங்கள் கெட்டுவிடும் (-துக்கத்திற்கு ஆளாகிவிடும்). நீங்கள் எதை தேடுபவர்களாக இருந்தீர்களோ அது இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்.