Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨௧

Qur'an Surah Al-Mulk Verse 21

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَمَّنْ هٰذَا الَّذِيْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِيْ عُتُوٍّ وَّنُفُوْرٍ (الملك : ٦٧)

amman
أَمَّنْ
Who is
மாறாக, யார்?
hādhā alladhī
هَٰذَا ٱلَّذِى
this the one
இவர்(கள்)/எவர்(கள்)
yarzuqukum
يَرْزُقُكُمْ
to provide you
உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்)
in amsaka
إِنْ أَمْسَكَ
if He withheld
அவன் தடுத்துவிட்டால்
riz'qahu
رِزْقَهُۥۚ
His provision
தனது உணவை
bal
بَل
Nay
மாறாக,
lajjū
لَّجُّوا۟
they persist
பிடிவாதம் பிடித்தனர்
fī ʿutuwwin
فِى عُتُوٍّ
in pride
வரம்பு மீறுவதிலும்
wanufūrin
وَنُفُورٍ
and aversion
விலகிச் செல்வதிலும்தான்

Transliteration:

Amman haazal lazee yarzuqukum in amsaka rizqah; bal lajjoo fee 'utuwwinw wa nufoor (QS. al-Mulk:21)

English Sahih International:

Or who is it that could provide for you if He withheld His provision? But they have persisted in insolence and aversion. (QS. Al-Mulk, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதனையும் இவர்கள் கவனிப்பதில்லை.) அன்று. இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨௧)

Jan Trust Foundation

அல்லது, தான் உணவளிப்பதை அவன் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவளிப்பவர் யார்? அப்படியல்ல, ஆனால், இவர்கள் மாறு செய்வதிலும் (சத்தியத்தை) வெறுப்பதிலும் ஆழ்ந்திருக்கின்றனர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கின்ற இவர்கள் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு அப்படி யாரும் இருக்கின்றார்களா?) மாறாக, அவர்கள் வரம்பு மீறுவதிலும் விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்.