Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௨

Qur'an Surah Al-Mulk Verse 2

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالَّذِيْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًاۗ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ (الملك : ٦٧)

alladhī
ٱلَّذِى
The One Who
எவன்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
l-mawta
ٱلْمَوْتَ
death
மரணத்தை(யும்)
wal-ḥayata
وَٱلْحَيَوٰةَ
and life
வாழ்க்கையையும்
liyabluwakum
لِيَبْلُوَكُمْ
that He may test you
அவன் உங்களை சோதிப்பதற்காக
ayyukum
أَيُّكُمْ
which of you
உங்களில் யார்
aḥsanu
أَحْسَنُ
(is) best
மிக அழகானவர்
ʿamalan
عَمَلًاۚ
(in) deed
செயலால்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
(is) the All-Mighty
மிகைத்தவன்
l-ghafūru
ٱلْغَفُورُ
the Oft-Forgiving
மகா மன்னிப்பாளன்

Transliteration:

Allazee khalaqal mawta walhayaata liyabluwakum ayyukum ahsanu 'amalaa; wa huwal 'azeezul ghafoor (QS. al-Mulk:2)

English Sahih International:

[He] who created death and life to test you [as to] which of you is best in deed – and He is the Exalted in Might, the Forgiving – (QS. Al-Mulk, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (ஸூரத்துல் முல்க், வசனம் ௨)

Jan Trust Foundation

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்.