Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௯

Qur'an Surah Al-Mulk Verse 19

ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰۤفّٰتٍ وَّيَقْبِضْنَۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُۗ اِنَّهٗ بِكُلِّ شَيْءٍۢ بَصِيْرٌ (الملك : ٦٧)

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
Do not they see
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-ṭayri
إِلَى ٱلطَّيْرِ
[to] the birds
பறவைகளை
fawqahum
فَوْقَهُمْ
above them
தங்களுக்கு மேல்
ṣāffātin
صَٰٓفَّٰتٍ
spreading (their wings)
விரித்தவைகளாகவும்
wayaqbiḍ'na
وَيَقْبِضْنَۚ
and folding?
மடக்கியவைகளாகவும்
mā yum'sikuhunna
مَا يُمْسِكُهُنَّ
Not holds them
அவற்றை தடுக்க முடியாது
illā l-raḥmānu
إِلَّا ٱلرَّحْمَٰنُۚ
except the Most Gracious
ரஹ்மானைத் தவிர
innahu
إِنَّهُۥ
Indeed He
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍۭ
(is) of every thing
எல்லாப் பொருளையும்
baṣīrun
بَصِيرٌ
All-Seer
உற்று நோக்குபவன்

Transliteration:

Awalam yaraw ilat tairi fawqahum saaaffaatinw wa yaqbidn; maa yumsikuhunna illaar rahmaan; innahoo bikulli shai im baseer (QS. al-Mulk:19)

English Sahih International:

Do they not see the birds above them with wings outspread and [sometimes] folded in? None holds them [aloft] except the Most Merciful. Indeed He is, of all things, Seeing. (QS. Al-Mulk, Ayah ௧௯)

Abdul Hameed Baqavi:

இறக்கைகளை விரித்துக் கொண்டும், மடக்கிக் கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்கினவனாக இருக்கின்றான். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௯)

Jan Trust Foundation

இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை - நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் தங்களுக்கு மேல் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறக்கின்ற பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில்) அவற்றை ரஹ்மானைத் தவிர (வேறு யாரும்) தடுக்கமுடியாது. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான்.