குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௫
Qur'an Surah Al-Mulk Verse 15
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِيْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖۗ وَاِلَيْهِ النُّشُوْرُ (الملك : ٦٧)
- huwa alladhī
- هُوَ ٱلَّذِى
- He (is) the One Who
- அவன்தான்
- jaʿala
- جَعَلَ
- made
- ஆக்கினான்
- lakumu
- لَكُمُ
- for you
- உங்களுக்கு
- l-arḍa
- ٱلْأَرْضَ
- the earth
- பூமியை
- dhalūlan
- ذَلُولًا
- subservient
- இலகுவாக
- fa-im'shū
- فَٱمْشُوا۟
- so walk
- ஆகவே செல்லுங்கள்
- fī manākibihā
- فِى مَنَاكِبِهَا
- in (the) paths thereof
- அதன் பல பகுதிகளில்
- wakulū
- وَكُلُوا۟
- and eat
- இன்னும் உண்ணுங்கள்
- min riz'qihi
- مِن رِّزْقِهِۦۖ
- of His provision
- அவனுடைய உணவில் இருந்து
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- அவன் பக்கம்தான்
- l-nushūru
- ٱلنُّشُورُ
- (is) the Resurrection
- எழுப்பப்படுதல்
Transliteration:
Huwal lazee ja'ala lakumul arda zaloolan famshoo fee manaakibihaa wa kuloo mir rizqihee wa ilaihin nushoor(QS. al-Mulk:15)
English Sahih International:
It is He who made the earth tame for you – so walk among its slopes and eat of His provision – and to Him is the resurrection. (QS. Al-Mulk, Ayah ௧௫)
Abdul Hameed Baqavi:
அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௫)
Jan Trust Foundation
அவனே உங்களுக்கு இப்பூமியை (நீங்கள் வாழ்வதற்கு) வசதியாக ஆக்கினான்; ஆகவே, அதன் பல மருங்குகளிலும், நடந்து அவனுடைய உணவிலிருந்து புசியுங்கள்; இன்னும் அவனிடமே (யாவரும்) உயிர்த்தெழவேண்டியிருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் பயன்படுத்துவதற்கு) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவனுடைய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் உங்களை) எழுப்பப்படுதல் இருக்கிறது.