குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧௦
Qur'an Surah Al-Mulk Verse 10
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِيْٓ اَصْحٰبِ السَّعِيْرِ (الملك : ٦٧)
- waqālū
- وَقَالُوا۟
- And they will say
- இன்னும் கூறுவார்கள்
- law kunnā
- لَوْ كُنَّا
- "If we had
- நாங்கள் இருந்தால்
- nasmaʿu
- نَسْمَعُ
- listened
- செவி ஏற்பவர்களாக
- aw
- أَوْ
- or
- அல்லது
- naʿqilu
- نَعْقِلُ
- reasoned
- சிந்தித்து புரிபவர்களாக
- mā kunnā
- مَا كُنَّا
- not we (would) have been
- ஆகி இருக்க மாட்டோம்
- fī aṣḥābi l-saʿīri
- فِىٓ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
- among (the) companions (of) the Blaze"
- நரகவாசிகளில்
Transliteration:
Wa qaaloo law kunnaa nasma'u awna'qilu maa kunnaa feee as haabis sa'eer(QS. al-Mulk:10)
English Sahih International:
And they will say, "If only we had been listening or reasoning, we would not be among the companions of the Blaze." (QS. Al-Mulk, Ayah ௧௦)
Abdul Hameed Baqavi:
அன்றி "(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவைகளை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்" என்று கூறி, (ஸூரத்துல் முல்க், வசனம் ௧௦)
Jan Trust Foundation
இன்னும் அவர்கள் கூறுவார்கள்| “நாங்கள் (அவர் போதனையைச்) செவியுற்றோ அல்லது சிந்தித்தோ இருந்திருந்தோமானால் நாங்கள் நரகவாசிகளில் இருந்திருக்க மாட்டோம்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக அல்லது சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.”