குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முல்க் வசனம் ௧
Qur'an Surah Al-Mulk Verse 1
ஸூரத்துல் முல்க் [௬௭]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَبٰرَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌۙ (الملك : ٦٧)
- tabāraka
- تَبَٰرَكَ
- Blessed is
- அருள் வளமிக்கவன்
- alladhī
- ٱلَّذِى
- He
- எவன்
- biyadihi
- بِيَدِهِ
- in Whose Hand
- அவனுடைய கரத்தில்
- l-mul'ku
- ٱلْمُلْكُ
- (is) the Dominion
- ஆட்சி
- wahuwa
- وَهُوَ
- and He
- அவன்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- (is) over every thing
- எல்லாப் பொருள்கள் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- பேராற்றலுடையவன்
Transliteration:
Tabaarakal lazee biyadihil mulku wa huwa 'alaa kulli shai-in qadeer(QS. al-Mulk:1)
English Sahih International:
Blessed is He in whose hand is dominion, and He is over all things competent – (QS. Al-Mulk, Ayah ௧)
Abdul Hameed Baqavi:
(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். (ஸூரத்துல் முல்க், வசனம் ௧)
Jan Trust Foundation
எவனுடைய கையில் ஆட்சி இருக்கின்றதோ அவன் பாக்கியவான்; மேலும், அவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கின்றதோ அவன் அருள் வளமிக்கவன். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்.