Skip to content

ஸூரா ஸூரத்துல் முல்க் - Page: 3

Al-Mulk

(al-Mulk)

௨௧

اَمَّنْ هٰذَا الَّذِيْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ ۚ بَلْ لَّجُّوْا فِيْ عُتُوٍّ وَّنُفُوْرٍ ٢١

amman
أَمَّنْ
மாறாக, யார்?
hādhā alladhī
هَٰذَا ٱلَّذِى
இவர்(கள்)/எவர்(கள்)
yarzuqukum
يَرْزُقُكُمْ
உங்களுக்கு உணவளிக்கின்றார்(கள்)
in amsaka
إِنْ أَمْسَكَ
அவன் தடுத்துவிட்டால்
riz'qahu
رِزْقَهُۥۚ
தனது உணவை
bal
بَل
மாறாக,
lajjū
لَّجُّوا۟
பிடிவாதம் பிடித்தனர்
fī ʿutuwwin
فِى عُتُوٍّ
வரம்பு மீறுவதிலும்
wanufūrin
وَنُفُورٍ
விலகிச் செல்வதிலும்தான்
அல்லாஹ் (உங்களுக்களிக்கும்) தன்னுடைய உணவைத் தடுத்துக் கொண்டால், உங்களுக்கு உணவு கொடுப்பவன் யார்? (இதனையும் இவர்கள் கவனிப்பதில்லை.) அன்று. இவர்கள் வழிகேட்டிலும், (சத்தியத்தை) வெறுப்பதிலுமே மூழ்கிக் கிடக்கின்றனர். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௧)
Tafseer
௨௨

اَفَمَنْ يَّمْشِيْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖٓ اَهْدٰىٓ اَمَّنْ يَّمْشِيْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ٢٢

afaman yamshī
أَفَمَن يَمْشِى
யார்?/நடக்கின்றான்
mukibban
مُكِبًّا
கவிழ்ந்தவனாக
ʿalā wajhihi
عَلَىٰ وَجْهِهِۦٓ
தனது முகத்தின் மீது
ahdā
أَهْدَىٰٓ
நேர்வழி பெற்றவனா
amman
أَمَّن
அல்லது யார்?
yamshī sawiyyan
يَمْشِى سَوِيًّا
நடக்கின்றான்/சரியாக
ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
என்னே! முகங்குப்புற விழுந்து செல்பவன் தன் லட்சியத்தை அடைவானா? அல்லது நேரான பாதையில் ஒழுங்காகச் செல்பவன் அடைவானா? ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௨)
Tafseer
௨௩

قُلْ هُوَ الَّذِيْٓ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَۗ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ ٢٣

qul
قُلْ
கூறுவீராக!
huwa alladhī
هُوَ ٱلَّذِىٓ
அவன்தான்
ansha-akum
أَنشَأَكُمْ
உங்களை உருவாக்கினான்
wajaʿala
وَجَعَلَ
இன்னும் ஏற்படுத்தினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-samʿa
ٱلسَّمْعَ
செவியை(யும்)
wal-abṣāra
وَٱلْأَبْصَٰرَ
பார்வைகளையும்
wal-afidata
وَٱلْأَفْـِٔدَةَۖ
உள்ளங்களையும்
qalīlan
قَلِيلًا
மிகக் குறைவாகவே
mā tashkurūna
مَّا تَشْكُرُونَ
நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களை படைத்து உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தவன். (அவ்வாறிருந்தும்) நீங்கள் வெகு சொற்பமாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகின்றீர்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௩)
Tafseer
௨௪

قُلْ هُوَ الَّذِيْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ ٢٤

qul
قُلْ
கூறுவீராக!
huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
dhara-akum
ذَرَأَكُمْ
உங்களை பரத்தினான்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கமே
tuḥ'sharūna
تُحْشَرُونَ
ஒன்று திரட்டப்படுவீர்கள்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரப்பி வைத்திருக்கின்றான். (மறுமையில்) அவனிடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௪)
Tafseer
௨௫

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٢٥

wayaqūlūna
وَيَقُولُونَ
அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
எப்போது நிகழும்
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
(இவ்வாறிருந்தும் நம்பிக்கையாளர்களை நோக்கி, அவர்கள்) "நீங்கள் உண்மை சொல்பவர்களாயிருந்தால் (மறுமையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?)" என்று கேட்கின்றார்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௫)
Tafseer
௨௬

قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖوَاِنَّمَآ اَنَا۠ نَذِيْرٌ مُّبِيْنٌ ٢٦

qul
قُلْ
கூறுவீராக!
innamā l-ʿil'mu
إِنَّمَا ٱلْعِلْمُ
அறிவெல்லாம்
ʿinda l-lahi
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்தான்
wa-innamā anā
وَإِنَّمَآ أَنَا۠
நான் எல்லாம்
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்தான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
அதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: ("அது எப்போது வரும் என்ற) ஞானம் அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. நான் (அதைப் பற்றிப்) பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்தான். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௬)
Tafseer
௨௭

فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِيْۤـَٔتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِيْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ ٢٧

falammā ra-awhu
فَلَمَّا رَأَوْهُ
அவர்கள் அதை பார்க்கின்றபோது
zul'fatan
زُلْفَةً
மிக நெருக்கமாக
sīat
سِيٓـَٔتْ
கெட்டுவிடும்
wujūhu
وُجُوهُ
முகங்கள்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
waqīla
وَقِيلَ
இன்னும் கூறப்படும்
hādhā
هَٰذَا
இதுதான்
alladhī
ٱلَّذِى
எதை
kuntum
كُنتُم
நீங்கள் இருந்தீர்களோ
bihi
بِهِۦ
அதை
taddaʿūna
تَدَّعُونَ
தேடுபவர்களாக
(நீங்கள் அச்சமூட்டிய) வேதனை (இவர்களை) நோக்கி வருவதை அவர்கள் கண்டால், அந்நிராகரிப்பவர்களுடைய முகங்கள் கருகிவிடும். (அன்றி, அவர்களை நோக்கி) "நீங்கள் (எப்பொழுது வரும், எப்பொழுது வரும் என்று) கேட்டுக் கொண்டிருந்தது இதுதான்" என்றும் கூறப்படும். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௭)
Tafseer
௨௮

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَكَنِيَ اللّٰهُ وَمَنْ مَّعِيَ اَوْ رَحِمَنَاۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ ٢٨

qul
قُلْ
கூறுவிராக
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in ahlakaniya
إِنْ أَهْلَكَنِىَ
என்னை(யும்) அழித்துவிட்டால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waman maʿiya
وَمَن مَّعِىَ
என்னுடன் இருப்பவர்களையும்
aw
أَوْ
அல்லது
raḥimanā
رَحِمَنَا
எங்கள் மீது கருணை புரிந்தால்
faman
فَمَن
யார்?
yujīru
يُجِيرُ
காப்பாற்றுவார்
l-kāfirīna
ٱلْكَٰفِرِينَ
நிராகரிப்பாளர்களை
min ʿadhābin
مِنْ عَذَابٍ
தண்டனையிலிருந்து
alīmin
أَلِيمٍ
வலி தரக்கூடிய(து)
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என்னையும், என்னுடன் இருப்பவர்களையும் (நீங்கள் விரும்புகின்றபடி) அல்லாஹ் அழித்து விட்டாலும் அல்லது அவன் எங்களுக்கு அருள் புரிந்தாலும் (அது எங்கள் விஷயம். ஆயினும்,) துன்புறுத்தும் வேதனையிலிருந்து நிராகரிக்கும் உங்களை பாதுகாப்பவர் யார் என்பதை(க் கவனித்து)ப் பார்த்தீர்களா? ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௮)
Tafseer
௨௯

قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَاۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٢٩

qul
قُلْ
கூறுவீராக!
huwa
هُوَ
அவன்தான்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
āmannā
ءَامَنَّا
நாங்கள் நம்பிக்கை கொண்டோம்
bihi
بِهِۦ
அவனை
waʿalayhi
وَعَلَيْهِ
இன்னும் அவன் மீதே
tawakkalnā
تَوَكَّلْنَاۖ
நாங்கள் நம்பிக்கை வைத்தோம்
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
விரைவில் அறிவீர்கள்
man huwa fī ḍalālin
مَنْ هُوَ فِى ضَلَٰلٍ
வழிகேட்டில் உள்ளவர்களை
mubīnin
مُّبِينٍ
தெளிவான
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவன்தான் ரஹ்மான். அவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவனையே நாங்கள் நம்பியும் இருக்கின்றோம். ஆகவே, பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள் யாரென்பதை அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்." ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௯)
Tafseer
௩௦

قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَاۤؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّأْتِيْكُمْ بِمَاۤءٍ مَّعِيْنٍ ࣖ ٣٠

qul
قُلْ
கூறுவீராக
ara-aytum
أَرَءَيْتُمْ
அறிவியுங்கள்
in aṣbaḥa
إِنْ أَصْبَحَ
சென்று விட்டால்
māukum
مَآؤُكُمْ
உங்கள் தண்ணீர்
ghawran faman
غَوْرًا فَمَن
ஆழத்தில்/யார்
yatīkum bimāin
يَأْتِيكُم بِمَآءٍ
உங்களுக்கு தண்ணீரைக் கொண்டு வருவார்
maʿīnin
مَّعِينٍۭ
மதுரமான
(பின்னும் நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(நீங்கள் குடிக்கும்) தண்ணீர் பூமிக்குள் வெகு ஆழத்தில் சென்றுவிட்டால், பிறகு தண்ணீரின் (வேறொரு) ஊற்றை உங்களுக்குக் கொண்டு வருபவன் யாரென்று கவனித்தீர்களா? ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௩௦)
Tafseer