Skip to content

ஸூரா ஸூரத்துல் முல்க் - Page: 2

Al-Mulk

(al-Mulk)

௧௧

فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ ١١

fa-iʿ'tarafū
فَٱعْتَرَفُوا۟
ஒப்புக் கொள்வார்கள்
bidhanbihim
بِذَنۢبِهِمْ
தங்கள் குற்றத்தை
fasuḥ'qan
فَسُحْقًا
ஆகவே கேடுதான்
li-aṣḥābi l-saʿīri
لِّأَصْحَٰبِ ٱلسَّعِيرِ
நரகவாசிகளுக்கு
தங்கள் பாவத்தை ஒப்புக்கொள்வார்கள். ஆகவே, இந்நரகவாசிகளுக்குக் கேடுதான். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௧)
Tafseer
௧௨

اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ ١٢

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yakhshawna
يَخْشَوْنَ
பயப்படுகின்றார்கள்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவில்
lahum
لَهُم
அவர்களுக்கு உண்டு
maghfiratun
مَّغْفِرَةٌ
மன்னிப்பு(ம்)
wa-ajrun kabīrun
وَأَجْرٌ كَبِيرٌ
பெரிய கூலியும்
நிச்சயமாக எவர்கள் மறைவான சமயத்திலும், தங்கள் இறைவனுக்குப் பயப்படுகின்றார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; பெரும் கூலியும் உண்டு. ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௨)
Tafseer
௧௩

وَاَسِرُّوْا قَوْلَكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ١٣

wa-asirrū
وَأَسِرُّوا۟
இரகசியமாகப் பேசுங்கள்
qawlakum
قَوْلَكُمْ
உங்கள் பேச்சை
awi ij'harū
أَوِ ٱجْهَرُوا۟
அல்லது உரக்கப் பேசுங்கள்
bihi
بِهِۦٓۖ
அதை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளதை
(மனிதர்களே!) நீங்கள் உங்கள் வார்த்தைகளை இரகசியமாகக் கூறுங்கள் அல்லது பகிரங்கமாகவே கூறுங்கள். (எவ்விதம் கூறியபோதிலும், இறைவன் அதனை நன்கறிந்து கொள்வான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன், (மனிதர்களின்) உள்ளங்களில் உள்ளவைகளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௩)
Tafseer
௧௪

اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَۗ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ ࣖ ١٤

alā yaʿlamu
أَلَا يَعْلَمُ
அவன் அறிய மாட்டானா?
man
مَنْ
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-laṭīfu
ٱللَّطِيفُ
நுட்பமானவன்
l-khabīru
ٱلْخَبِيرُ
ஆழ்ந்தறிபவன்
(அனைவரையும்) படைத்தவன் (அவைகளில் உள்ளவைகளை) அறிய மாட்டானா? அவனோ உட்கிருபை உடையவனாகவும் (அனைத்தையும்) வெகு நுட்பமாக அறியக் கூடியவனாகவும் இருக்கின்றான். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௪)
Tafseer
௧௫

هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِيْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖۗ وَاِلَيْهِ النُّشُوْرُ ١٥

huwa alladhī
هُوَ ٱلَّذِى
அவன்தான்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்கு
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
dhalūlan
ذَلُولًا
இலகுவாக
fa-im'shū
فَٱمْشُوا۟
ஆகவே செல்லுங்கள்
fī manākibihā
فِى مَنَاكِبِهَا
அதன் பல பகுதிகளில்
wakulū
وَكُلُوا۟
இன்னும் உண்ணுங்கள்
min riz'qihi
مِن رِّزْقِهِۦۖ
அவனுடைய உணவில் இருந்து
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கம்தான்
l-nushūru
ٱلنُّشُورُ
எழுப்பப்படுதல்
அவன்தான் உங்களுக்குப் பூமியை (நீங்கள் வசிப்பதற்கு) வசதியாக ஆக்கி வைத்தான். ஆகவே, அதன் பல கோணங்களிலும் சென்று, அவன் (உங்களுக்கு) அளித்திருப்பவைகளைப் புசித்துக் கொண்டிருங்கள். (மறுமையில்) அவனிடமே (அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௫)
Tafseer
௧௬

ءَاَمِنْتُمْ مَّنْ فِى السَّمَاۤءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِيَ تَمُوْرُۙ ١٦

a-amintum
ءَأَمِنتُم
பயமற்று இருக்கின்றீர்களா?
man fī l-samāi
مَّن فِى ٱلسَّمَآءِ
வானத்தின் மேல் உள்ளவன்
an yakhsifa
أَن يَخْسِفَ
சொருகிவிடுவதை
bikumu
بِكُمُ
உங்களை
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியில்
fa-idhā hiya
فَإِذَا هِىَ
அப்போது அது
tamūru
تَمُورُ
குலுங்கும்
வானத்தில் இருப்பவன், உங்களைப் பூமியில் சொருகிவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்றிருக்கின்றீர்களா? அந்நேரத்தில் பூமி அதிர்ந்து நடு நடுங்(கிக்) கு(முறு)ம். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௬)
Tafseer
௧௭

اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَاۤءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًاۗ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ ١٧

am amintum
أَمْ أَمِنتُم
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
man fī l-samāi
مَّن فِى ٱلسَّمَآءِ
வானத்தின் மேல் உள்ளவன்
an yur'sila
أَن يُرْسِلَ
அனுப்புவதை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ḥāṣiban
حَاصِبًاۖ
கல் மழையை
fasataʿlamūna
فَسَتَعْلَمُونَ
விரைவில் அறிவீர்கள்
kayfa
كَيْفَ
எப்படி (இருந்தது)
nadhīri
نَذِيرِ
என் எச்சரிக்கை
அல்லது வானத்திலிருப்பவன், உங்கள் மீது கல்மழையை பொழிய மாட்டான் என்று நீங்கள் பயமற்றிருக்கின்றீர்களா? அவ்வாறாயின், எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எவ்வாறிருக்கும் என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௭)
Tafseer
௧௮

وَلَقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ ١٨

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
kadhaba
كَذَّبَ
பொய்ப்பித்தார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னர்
fakayfa
فَكَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தது
nakīri
نَكِيرِ
எனது மறுப்பு
இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (இவர்களைப் போலவே நம் வசனங்களைப்) பொய்யாக்கி (நிராகரித்து)க் கொண்டிருந்தனர். அந்நிராகரிப்பு எவ்வாறாயிற்று என்பதை (நபியே!) நீங்கள் கவனித்தீர்களா? ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௮)
Tafseer
௧௯

اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰۤفّٰتٍ وَّيَقْبِضْنَۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُۗ اِنَّهٗ بِكُلِّ شَيْءٍۢ بَصِيْرٌ ١٩

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā l-ṭayri
إِلَى ٱلطَّيْرِ
பறவைகளை
fawqahum
فَوْقَهُمْ
தங்களுக்கு மேல்
ṣāffātin
صَٰٓفَّٰتٍ
விரித்தவைகளாகவும்
wayaqbiḍ'na
وَيَقْبِضْنَۚ
மடக்கியவைகளாகவும்
mā yum'sikuhunna
مَا يُمْسِكُهُنَّ
அவற்றை தடுக்க முடியாது
illā l-raḥmānu
إِلَّا ٱلرَّحْمَٰنُۚ
ரஹ்மானைத் தவிர
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍۭ
எல்லாப் பொருளையும்
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
இறக்கைகளை விரித்துக் கொண்டும், மடக்கிக் கொண்டும் இவர்களுக்கு மேல் ஆகாயத்தில் (அணி அணியாகச் செல்லும் பறவைகளை இவர்கள் கவனிக்கவில்லையா? ரஹ்மானைத் தவிர, (மற்றெவரும்) அவைகளை (ஆகாயத்தில் தூக்கி)ப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை! நிச்சயமாக அவன் அனைத்தையும் உற்று நோக்கினவனாக இருக்கின்றான். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௯)
Tafseer
௨௦

اَمَّنْ هٰذَا الَّذِيْ هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِۗ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِيْ غُرُوْرٍۚ ٢٠

amman
أَمَّنْ
மாறாக, யார்?
hādhā
هَٰذَا
இவர்(கள்)
alladhī huwa
ٱلَّذِى هُوَ
எவர்(கள்)/அவர்(கள்)
jundun lakum
جُندٌ لَّكُمْ
உங்கள் ராணுவமாக
yanṣurukum
يَنصُرُكُم
உங்களுக்கு உதவுகின்றார்(கள்)
min dūni
مِّن دُونِ
அன்றி
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِۚ
பேரருளாளனை
ini l-kāfirūna
إِنِ ٱلْكَٰفِرُونَ
நிராகரிப்பாளர்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
fī ghurūrin
فِى غُرُورٍ
ஏமாற்றத்தில்
ரஹ்மானையன்றி உங்களுக்கு உதவி செய்யக்கூடிய படைகள் எவை? இந்நிராகரிப்பவர்கள் வெறும் மாயையிலன்றி வேறில்லை. ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨௦)
Tafseer