Skip to content

ஸூரா ஸூரத்துல் முல்க் - Word by Word

Al-Mulk

(al-Mulk)

bismillaahirrahmaanirrahiim

تَبٰرَكَ الَّذِيْ بِيَدِهِ الْمُلْكُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌۙ ١

tabāraka
تَبَٰرَكَ
அருள் வளமிக்கவன்
alladhī
ٱلَّذِى
எவன்
biyadihi
بِيَدِهِ
அவனுடைய கரத்தில்
l-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சி
wahuwa
وَهُوَ
அவன்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧)
Tafseer

ۨالَّذِيْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًاۗ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ ٢

alladhī
ٱلَّذِى
எவன்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-mawta
ٱلْمَوْتَ
மரணத்தை(யும்)
wal-ḥayata
وَٱلْحَيَوٰةَ
வாழ்க்கையையும்
liyabluwakum
لِيَبْلُوَكُمْ
அவன் உங்களை சோதிப்பதற்காக
ayyukum
أَيُّكُمْ
உங்களில் யார்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகானவர்
ʿamalan
عَمَلًاۚ
செயலால்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ʿazīzu
ٱلْعَزِيزُ
மிகைத்தவன்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௨)
Tafseer

الَّذِيْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًاۗ مَا تَرٰى فِيْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍۗ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ ٣

alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
எவன்/படைத்தான்
sabʿa samāwātin
سَبْعَ سَمَٰوَٰتٍ
ஏழு வானங்களை
ṭibāqan
طِبَاقًاۖ
அடுக்கடுக்காக
mā tarā
مَّا تَرَىٰ
நீர் பார்ப்பதில்லை
fī khalqi
فِى خَلْقِ
படைப்பில்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனின்
min tafāwutin
مِن تَفَٰوُتٍۖ
எவ்வித ஏற்றத் தாழ்வையும்
fa-ir'jiʿi l-baṣara
فَٱرْجِعِ ٱلْبَصَرَ
நீர் மீண்டும் திருப்புவீராக!/பார்வையை
hal tarā
هَلْ تَرَىٰ
நீர் பார்க்கிறீரா?
min fuṭūrin
مِن فُطُورٍ
ஏதாவது பிளவுகளை
அவனே ஏழு வானங்களையும் அடுக்கடுக்காகப் படைத்தவன். (மனிதனே!) அந்த ரஹ்மானுடைய படைப்பில் நீ யாதொரு ஒழுங்கீனத்தையும் காணமாட்டாய். மற்றொரு முறை (அதனைக் கவனித்துப்) பார். அதில் யாதொரு பிளவை நீ காண்கின்றாயா? ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௩)
Tafseer

ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ ٤

thumma
ثُمَّ
பிறகு
ir'jiʿi
ٱرْجِعِ
மீண்டும் திருப்புவீராக!
l-baṣara
ٱلْبَصَرَ
பார்வையை
karratayni
كَرَّتَيْنِ
இரு முறை
yanqalib
يَنقَلِبْ
திரும்பிவிடும்
ilayka
إِلَيْكَ
உம் பக்கம்
l-baṣaru
ٱلْبَصَرُ
அந்தப் பார்வை
khāsi-an
خَاسِئًا
இழிவடைந்ததாக
wahuwa
وَهُوَ
இன்னும் அது
ḥasīrun
حَسِيرٌ
கலைத்துவிடும்
(பின்னும்) பின்னும் இரு முறை பார்! (இவ்வாறு நீ எத்தனை முறை துருவித் துருவிப் பார்த்தபோதிலும் யாதொரு குறையும் காண முடியாது.) உன்னுடைய பார்வைதான் அலுத்து, கேவலமுற்று உன்னிடம் திரும்பிவிடும். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௪)
Tafseer

وَلَقَدْ زَيَّنَّا السَّمَاۤءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ ٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
zayyannā
زَيَّنَّا
அலங்கரித்தோம்
l-samāa l-dun'yā
ٱلسَّمَآءَ ٱلدُّنْيَا
வானத்தை/கீழ்
bimaṣābīḥa
بِمَصَٰبِيحَ
விளக்குகளால்
wajaʿalnāhā
وَجَعَلْنَٰهَا
இன்னும் அவற்றை ஏற்படுத்தினோம்
rujūman
رُجُومًا
எறிவதற்காக
lilshayāṭīni
لِّلشَّيَٰطِينِۖ
ஷைத்தான்களை
wa-aʿtadnā
وَأَعْتَدْنَا
இன்னும் தயார் செய்துள்ளோம்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāba l-saʿīri
عَذَابَ ٱلسَّعِيرِ
கொழுந்து விட்டெரியும் நரகநெருப்பின் வேதனையை
நிச்சயமாக நாம், சமீபமாக உள்ள வானத்தை (பூமியிலுள்ள வர்களுக்கு நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்தோம். அன்றி, அவைகளை ஷைத்தான்களுக்கு ஓர் எறிகல்லாகவும் அமைத்தோம். (இதையன்றி) அவர்களுக்கு நரக வேதனையையும் நாம் தயார்படுத்தி வைத்திருக்கின்றோம். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௫)
Tafseer

وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَۗ وَبِئْسَ الْمَصِيْرُ ٦

walilladhīna kafarū
وَلِلَّذِينَ كَفَرُوا۟
நிராகரிப்பவர்களுக்கு
birabbihim
بِرَبِّهِمْ
தங்கள் இறைவனை
ʿadhābu
عَذَابُ
தண்டனை
jahannama
جَهَنَّمَۖ
நரகத்தின்
wabi'sa
وَبِئْسَ
இன்னும் மிகக் கெட்டது
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்
(இவர்களையன்றி) இன்னும் எவர்கள் தங்கள் இறைவனை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நரக வேதனையுண்டு. அது மகாகெட்ட தங்குமிடம். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௬)
Tafseer

اِذَآ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِيَ تَفُوْرُۙ ٧

idhā ul'qū
إِذَآ أُلْقُوا۟
அவர்கள் எறியப்பட்டால்
fīhā
فِيهَا
அதில்
samiʿū
سَمِعُوا۟
செவியுறுவார்கள்
lahā
لَهَا
அதில்
shahīqan
شَهِيقًا
கடுமையான சப்தத்தை
wahiya
وَهِىَ
இன்னும் அது
tafūru
تَفُورُ
கொதிக்கும்
அதில் அவர்கள் (தூக்கி) எறியப்படும்பொழுது (கழுதையின் பெரிய சப்தத்தைப் போல்) அதன் கொதி சப்தத்தைக் கேட்பார்கள். அது கோபத்தால் வெடித்து விடுவதைப் போல் குமுறிக் கொண்டிருக்கும். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௭)
Tafseer

تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِۗ كُلَّمَآ اُلْقِيَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَتُهَآ اَلَمْ يَأْتِكُمْ نَذِيْرٌۙ ٨

takādu
تَكَادُ
அது நெருங்கிவிடும்
tamayyazu
تَمَيَّزُ
தெரித்துவிட
mina l-ghayẓi
مِنَ ٱلْغَيْظِۖ
கோபத்தால்
kullamā ul'qiya
كُلَّمَآ أُلْقِىَ
எறியப்படும் போதெல்லாம்
fīhā
فِيهَا
அதில்
fawjun
فَوْجٌ
ஒரு கூட்டம்
sa-alahum
سَأَلَهُمْ
அவர்களிடம் கேட்பார்(கள்)
khazanatuhā
خَزَنَتُهَآ
அதன் காவலாளிகள்
alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
உங்களிடம் வரவில்லையா?
nadhīrun
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளர்
அதில் ஒரு கூட்டத்தினரை எறியப்படும் பொழுதெல்லாம், அதன் காவலாளர் அவர்களை நோக்கி ("இவ்வேதனையைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் உங்களிடம் வரவில்லையா" என்று கேட்பார்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௮)
Tafseer

قَالُوْا بَلٰى قَدْ جَاۤءَنَا نَذِيْرٌ ەۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَيْءٍۖ اِنْ اَنْتُمْ اِلَّا فِيْ ضَلٰلٍ كَبِيْرٍ ٩

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
balā
بَلَىٰ
ஏன் வரவில்லை
qad
قَدْ
திட்டமாக
jāanā
جَآءَنَا
எங்களிடம் வந்தார்
nadhīrun
نَذِيرٌ
எச்சரிப்பாளர்
fakadhabnā
فَكَذَّبْنَا
ஆனால் பொய்ப்பித்தோம்
waqul'nā
وَقُلْنَا
இன்னும் கூறினோம்
mā nazzala
مَا نَزَّلَ
இறக்கவில்லை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min shayin
مِن شَىْءٍ
எதையும்
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலேயே
kabīrin
كَبِيرٍ
பெரிய
அதற்கவர்கள் "மெய்தான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் தூதர் நிச்சயமாக எங்களிடம் வந்தார். எனினும், நாங்கள் (அவரைப்) பொய்யாக்கி, அல்லாஹ் (உங்கள் மீது) யாதொன்றையும் இறக்கி வைக்கவே இல்லை. நீங்கள் பெரும் வழிகேட்டிலன்றி இருக்க வில்லை என்று (அவர்களை நோக்கி) நாங்கள் கூறினோம்" எனறு கூறுவார்கள். ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௯)
Tafseer
௧௦

وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِيْٓ اَصْحٰبِ السَّعِيْرِ ١٠

waqālū
وَقَالُوا۟
இன்னும் கூறுவார்கள்
law kunnā
لَوْ كُنَّا
நாங்கள் இருந்தால்
nasmaʿu
نَسْمَعُ
செவி ஏற்பவர்களாக
aw
أَوْ
அல்லது
naʿqilu
نَعْقِلُ
சிந்தித்து புரிபவர்களாக
mā kunnā
مَا كُنَّا
ஆகி இருக்க மாட்டோம்
fī aṣḥābi l-saʿīri
فِىٓ أَصْحَٰبِ ٱلسَّعِيرِ
நரகவாசிகளில்
அன்றி "(அத்தூதர்களின் வார்த்தைகளுக்கு) நாங்கள் செவிசாய்த்து அவைகளை நாங்கள் சிந்தித்திருந்தால், நாங்கள் நரகவாசிகளாகி இருக்கவே மாட்டோம்" என்று கூறி, ([௬௭] ஸூரத்துல் முல்க்: ௧௦)
Tafseer