Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௬

Qur'an Surah At-Tahrim Verse 6

ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْٓا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰۤىِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَآ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ (التحريم : ٦٦)

yāayyuhā alladhīna āmanū
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟
O! (you) who! believe!
நம்பிக்கையாளர்களே!
قُوٓا۟
Protect
பாதுகாத்துக் கொள்ளுங்கள்
anfusakum
أَنفُسَكُمْ
yourselves
உங்களையும்
wa-ahlīkum
وَأَهْلِيكُمْ
and your families
உங்கள் குடும்பத்தாரையும்
nāran
نَارًا
(from) a Fire
நரகத்தைவிட்டு
waqūduhā
وَقُودُهَا
whose fuel
அதன் எரிபொருள்
l-nāsu wal-ḥijāratu
ٱلنَّاسُ وَٱلْحِجَارَةُ
(is) people and stones
மக்களும்/கற்களும்
ʿalayhā
عَلَيْهَا
over it
அவற்றின் மீது
malāikatun
مَلَٰٓئِكَةٌ
(are) Angels
வானவர்கள்
ghilāẓun
غِلَاظٌ
stern
முரடர்களாக
shidādun
شِدَادٌ
severe
கடுமையானவர்களான
lā yaʿṣūna
لَّا يَعْصُونَ
not they disobey
மாறு செய்யமாட்டார்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்விற்கு
mā amarahum wayafʿalūna
مَآ أَمَرَهُمْ وَيَفْعَلُونَ
(in) what He Commands them but they do
அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள்
mā yu'marūna
مَا يُؤْمَرُونَ
what they are commanded
அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ

Transliteration:

Yaaa ayyuhal lazeena samanoo qooo anfusakum wa ahleekum naaranw waqoodu han naasu wal hijaaratu 'alaihaa malaaa'ikatun ghilaazun shidaadul laa ya'soonal laaha maa amarahum wa yaf'aloona maa yu'maroon (QS. at-Taḥrīm:6)

English Sahih International:

O you who have believed, protect yourselves and your families from a Fire whose fuel is people and stones, over which are [appointed] angels, harsh and severe; they do not disobey Allah in what He commands them but do what they are commanded. (QS. At-Tahrim, Ayah ௬)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான மலக்குகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.. (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௬)

Jan Trust Foundation

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆகும். அவற்றின் மீது முரடர்களான கடுமையானவர்களான வானவர்கள் இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ அதையே செய்வார்கள்.