குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௫
Qur'an Surah At-Tahrim Verse 5
ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَسٰى رَبُّهٗٓ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗٓ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰۤىِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰۤىِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا (التحريم : ٦٦)
- ʿasā rabbuhu
- عَسَىٰ رَبُّهُۥٓ
- Perhaps his Lord
- கூடும்/அவருடைய இறைவன்
- in ṭallaqakunna
- إِن طَلَّقَكُنَّ
- if he divorced you
- அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால்
- an yub'dilahu
- أَن يُبْدِلَهُۥٓ
- [that] He will substitute for him
- அவருக்கு பகரமாக வழங்குவான்
- azwājan
- أَزْوَٰجًا
- wives
- மனைவிகளை
- khayran
- خَيْرًا
- better
- சிறந்தவர்களான
- minkunna
- مِّنكُنَّ
- than you
- உங்களை விட
- mus'limātin
- مُسْلِمَٰتٍ
- submissive
- முற்றிலும் பணியக்கூடிய
- mu'minātin
- مُّؤْمِنَٰتٍ
- faithful
- நம்பிக்கை கொள்ளக்கூடிய
- qānitātin
- قَٰنِتَٰتٍ
- obedient
- கீழ்ப்படியக்கூடிய
- tāibātin
- تَٰٓئِبَٰتٍ
- repentant
- வணக்க வழிபாடு செய்யக்கூடிய
- ʿābidātin
- عَٰبِدَٰتٍ
- who worship
- வணக்க வழிபாடு செய்யக்கூடிய
- sāiḥātin
- سَٰٓئِحَٰتٍ
- who fast
- நோன்பு நோற்கக்கூடிய
- thayyibātin
- ثَيِّبَٰتٍ
- previously married
- கன்னி கழிந்தவர்களும்
- wa-abkāran
- وَأَبْكَارًا
- and virgins
- கன்னிகளும்
Transliteration:
'Asaa rabbuhooo in tallaqakunna anyyubdilahooo azwaajan khairam mnkunna muslimaatim mu'minaatin qaanitaatin taaa'ibaatin 'aabidaatin saaa'ihaatin saiyibaatinw wa abkaaraa(QS. at-Taḥrīm:5)
English Sahih International:
Perhaps his Lord, if he divorced you [all], would substitute for him wives better than you – submitting [to Allah], believing, devoutly obedient, repentant, worshipping, and traveling – [ones] previously married and virgins. (QS. At-Tahrim, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
நபி உங்களை "தலாக்" கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்கள் பலரை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாகவும், நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், (இறைவனுக்குப்) பயந்து (நமது நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக் கூடியவர்களாகவும், (பாவத்தைவிட்டு) விலகியவர்களாகவும், (இறைவனை) வணங்குபவர்களாகவும், நோன்பு நோற்பவர்களாகவும், கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம்.) (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௫)
Jan Trust Foundation
அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர் உங்களை (-மனைவிமார்களை) விவாகரத்து (-தலாக்) செய்துவிட்டால் உங்களை விட சிறந்தவர்களான மனைவிகளை - (அல்லாஹ்விற்கும் நபிக்கும்) முற்றிலும் பணியக்கூடிய, (அல்லாஹ்வையும் நபியையும்) நம்பிக்கை கொள்ளக்கூடிய, கீழ்ப்படியக்கூடிய, அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக் கூடிய, வணக்க வழிபாடு செய்யக்கூடிய, நோன்பு நோற்கக்கூடிய பெண்களை அவருக்கு அவன் பகரமாக வழங்கக்கூடும் (-வழங்குவான்). அவர்களில் கன்னி கழிந்தவர்களும் இருப்பார்கள், கன்னிகளும் இருப்பார்கள்.