குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௪
Qur'an Surah At-Tahrim Verse 4
ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنْ تَتُوْبَآ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَاۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰىهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَۚ وَالْمَلٰۤىِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ (التحريم : ٦٦)
- in tatūbā
- إِن تَتُوبَآ
- If you both turn
- நீங்கள் இருவரும் திரும்பிவிட்டால்
- ilā l-lahi
- إِلَى ٱللَّهِ
- to Allah
- அல்லாஹ்வின் பக்கம்
- faqad
- فَقَدْ
- so indeed
- ஏனெனில், திட்டமாக
- ṣaghat
- صَغَتْ
- (are) inclined
- சாய்ந்து விட்டன
- qulūbukumā
- قُلُوبُكُمَاۖ
- your hearts;
- உங்கள் இருவரின் உள்ளங்களும்
- wa-in taẓāharā
- وَإِن تَظَٰهَرَا
- but if you backup each other
- நீங்கள் இருவரும் உதவினால்
- ʿalayhi
- عَلَيْهِ
- against him
- அவருக்கு எதிராக
- fa-inna l-laha huwa
- فَإِنَّ ٱللَّهَ هُوَ
- then indeed Allah He
- ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான்
- mawlāhu
- مَوْلَىٰهُ
- (is) his Protector
- அவருக்குப் பாதுகாவலன்
- wajib'rīlu
- وَجِبْرِيلُ
- and Jibreel
- இன்னும் ஜிப்ரீலும்
- waṣāliḥu l-mu'minīna
- وَصَٰلِحُ ٱلْمُؤْمِنِينَۖ
- and (the) righteous believers
- இன்னும் நல்ல முஃமின்களும்
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- and the Angels
- வானவர்களும்
- baʿda dhālika
- بَعْدَ ذَٰلِكَ
- after that
- இதற்குப் பின்னர்
- ẓahīrun
- ظَهِيرٌ
- (are his) assistants
- உதவியாளர்கள்
Transliteration:
In tatoobaaa ilal laahi faqad saghat quloobukumaa wa in tazaaharaa 'alihi fa innal laaha huwa mawlaahu wa jibreelu wa saalihul mu'mineen; walma laaa'ikatu ba'dazaalika zaheer(QS. at-Taḥrīm:4)
English Sahih International:
If you two [wives] repent to Allah, [it is best], for your hearts have deviated. But if you cooperate against him – then indeed Allah is his protector, and Gabriel and the righteous of the believers and the angels, moreover, are [his] assistants. (QS. At-Tahrim, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் (அது உங்களுக்கே நன்று. ஏனென்றால்,) உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கின்றான். அன்றி, ஜிப்ரயீலும், நம்பிக்கை யாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) மலக்குகளும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௪)
Jan Trust Foundation
நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீங்கள் இருவரும் (பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி,) அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டால் அதுதான் நல்லது. ஏனெனில், திட்டமாக உங்கள் இருவரின் உள்ளங்களும் (நபிக்குப் பிடிக்காத ஒன்றின் பக்கம்) சாய்ந்து விட்டன. நீங்கள் இருவரும் அவருக்கு எதிராக (உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு) உதவினால் (அதனால் நபிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்குப் பாதுகாவலன் (உதவியாளன் - நண்பன்) ஆவான். இன்னும் ஜிப்ரீலும் நல்ல முஃமின்களும் வானவர்களும் இதற்குப் பின்னர் (-அல்லாஹ்வின் உதவிக்குப் பின்னர் அவருக்கு) உதவியாளர்கள் ஆவார்கள்.