குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௧௨
Qur'an Surah At-Tahrim Verse 12
ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِيْٓ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ ࣖ ۔ (التحريم : ٦٦)
- wamaryama
- وَمَرْيَمَ
- And Maryam
- இன்னும் மர்யமை
- ib'nata
- ٱبْنَتَ
- (the) daughter
- மகள்
- ʿim'rāna
- عِمْرَٰنَ
- (of) Imran
- இம்ரானின்
- allatī
- ٱلَّتِىٓ
- who
- எவள்
- aḥṣanat
- أَحْصَنَتْ
- guarded
- பேணிக்கொண்டாள்
- farjahā
- فَرْجَهَا
- her chastity
- தனது மறைவிடத்தை
- fanafakhnā
- فَنَفَخْنَا
- so We breathed
- ஆகவே நாம் ஊதினோம்
- fīhi
- فِيهِ
- into it
- அதில்
- min rūḥinā
- مِن رُّوحِنَا
- of Our Spirit
- நமது உயிரிலிருந்து
- waṣaddaqat
- وَصَدَّقَتْ
- And she believed
- இன்னும் உண்மைப்படுத்தினாள்
- bikalimāti
- بِكَلِمَٰتِ
- (in the) Words
- வாக்கியங்களையும்
- rabbihā
- رَبِّهَا
- (of) her Lord
- தனது இறைவனின்
- wakutubihi
- وَكُتُبِهِۦ
- and His Books
- அவனது வேதங்களையும்
- wakānat
- وَكَانَتْ
- and she was
- இன்னும் இருந்தாள்
- mina l-qānitīna
- مِنَ ٱلْقَٰنِتِينَ
- of the devoutly obedient
- மிகவும் பணிந்தவர்களில்
Transliteration:
Wa Maryamab nata 'Imraanal lateee ahsanat farjahaa fanafakhnaa feehi mir roobinaa wa saddaqat bikali maati Rabbihaa wa Kutubihee wakaanat minal qaaniteen(QS. at-Taḥrīm:12)
English Sahih International:
And [the example of] Mary, the daughter of Imran, who guarded her chastity, so We blew into [her garment] through Our angel [i.e., Gabriel], and she believed in the words of her Lord and His scriptures and was of the devoutly obedient. (QS. At-Tahrim, Ayah ௧௨)
Abdul Hameed Baqavi:
(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவர் தன்னுடைய கற்பை பாதுகாத்துக்கொண்டார். ஆகவே, அவருடைய கர்ப்பத்தில் நம்முடைய ரூஹிலிருந்து ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவராகவும் இருந்தார். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௧௨)
Jan Trust Foundation
மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கின்றான்). அவள் தனது மறைவிடத்தை பேணிக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நமது (-நாம் படைத்த) உயிரிலிருந்து ஊதினோம். அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும் அவள் மிகவும் பணிந்தவர்களில் (ஒருத்தியாக) இருந்தாள்.