Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் வசனம் ௧௧

Qur'an Surah At-Tahrim Verse 11

ஸூரத்துத் தஹ்ரீம் [௬௬]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِيْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِيْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَنَّةِ وَنَجِّنِيْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ (التحريم : ٦٦)

waḍaraba
وَضَرَبَ
And presents
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
mathalan
مَثَلًا
an example
உதாரணமாக
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
for those who believed
நம்பிக்கையாளர்களுக்கு
im'ra-ata
ٱمْرَأَتَ
(the) wife
மனைவியை
fir'ʿawna
فِرْعَوْنَ
(of) Firaun
ஃபிர்அவ்னின்
idh qālat
إِذْ قَالَتْ
when she said
அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbi
رَبِّ
"My Lord!
என் இறைவா
ib'ni
ٱبْنِ
Build
அமைத்துத் தா!
لِى
for me
எனக்கு
ʿindaka
عِندَكَ
near You
உன்னிடம்
baytan
بَيْتًا
a house
ஓர் இல்லத்தை
fī l-janati
فِى ٱلْجَنَّةِ
in Paradise
சொர்க்கத்தில்
wanajjinī
وَنَجِّنِى
and save me
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
min fir'ʿawna
مِن فِرْعَوْنَ
from Firaun
ஃபிர்அவ்னை விட்டும்
waʿamalihi
وَعَمَلِهِۦ
and his deeds
இன்னும் அவனது செயல்களை
wanajjinī
وَنَجِّنِى
and save me
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
from the people
மக்களை விட்டும்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
the wrongdoers"
அநியாயக்கார(ர்கள்)

Transliteration:

Wa darabal laahu masa lal-lillazeena aamanumra ata Fir'awn; iz qaalat rabbibni lee 'indaka baitan fil jannati wa najjinee min Fir'awna wa 'amalihii wa najjinee minal qawmiz zaalimeen (QS. at-Taḥrīm:11)

English Sahih International:

And Allah presents an example of those who believed: the wife of Pharaoh, when she said, "My Lord, build for me near You a house in Paradise and save me from Pharaoh and his deeds and save me from the wrongdoing people." (QS. At-Tahrim, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள். (ஸூரத்துத் தஹ்ரீம், வசனம் ௧௧)

Jan Trust Foundation

மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நம்பிக்கையாளர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கின்றான். அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் இறைவா! உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எனக்கு அமைத்துத் தா! ஃபிர்அவ்னை விட்டும் அவனது செயல்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்! இன்னும் அநியாயக்கார மக்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்!