Skip to content

ஸூரா ஸூரத்துத் தஹ்ரீம் - Page: 2

At-Tahrim

(at-Taḥrīm)

௧௧

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّلَّذِيْنَ اٰمَنُوا امْرَاَتَ فِرْعَوْنَۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِيْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَنَّةِ وَنَجِّنِيْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِيْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ ١١

waḍaraba
وَضَرَبَ
விவரிக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
mathalan
مَثَلًا
உதாரணமாக
lilladhīna āmanū
لِّلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கையாளர்களுக்கு
im'ra-ata
ٱمْرَأَتَ
மனைவியை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னின்
idh qālat
إِذْ قَالَتْ
அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
rabbi
رَبِّ
என் இறைவா
ib'ni
ٱبْنِ
அமைத்துத் தா!
لِى
எனக்கு
ʿindaka
عِندَكَ
உன்னிடம்
baytan
بَيْتًا
ஓர் இல்லத்தை
fī l-janati
فِى ٱلْجَنَّةِ
சொர்க்கத்தில்
wanajjinī
وَنَجِّنِى
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
min fir'ʿawna
مِن فِرْعَوْنَ
ஃபிர்அவ்னை விட்டும்
waʿamalihi
وَعَمَلِهِۦ
இன்னும் அவனது செயல்களை
wanajjinī
وَنَجِّنِى
இன்னும் என்னை பாதுகாத்துக் கொள்
mina l-qawmi
مِنَ ٱلْقَوْمِ
மக்களை விட்டும்
l-ẓālimīna
ٱلظَّٰلِمِينَ
அநியாயக்கார(ர்கள்)
நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகின்றான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சுவனபதியில் எனக்கு ஒரு வீட்டை அமைத்து, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்" என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௧௧)
Tafseer
௧௨

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِيْٓ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ ࣖ ۔ ١٢

wamaryama
وَمَرْيَمَ
இன்னும் மர்யமை
ib'nata
ٱبْنَتَ
மகள்
ʿim'rāna
عِمْرَٰنَ
இம்ரானின்
allatī
ٱلَّتِىٓ
எவள்
aḥṣanat
أَحْصَنَتْ
பேணிக்கொண்டாள்
farjahā
فَرْجَهَا
தனது மறைவிடத்தை
fanafakhnā
فَنَفَخْنَا
ஆகவே நாம் ஊதினோம்
fīhi
فِيهِ
அதில்
min rūḥinā
مِن رُّوحِنَا
நமது உயிரிலிருந்து
waṣaddaqat
وَصَدَّقَتْ
இன்னும் உண்மைப்படுத்தினாள்
bikalimāti
بِكَلِمَٰتِ
வாக்கியங்களையும்
rabbihā
رَبِّهَا
தனது இறைவனின்
wakutubihi
وَكُتُبِهِۦ
அவனது வேதங்களையும்
wakānat
وَكَانَتْ
இன்னும் இருந்தாள்
mina l-qānitīna
مِنَ ٱلْقَٰنِتِينَ
மிகவும் பணிந்தவர்களில்
(இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவர் தன்னுடைய கற்பை பாதுகாத்துக்கொண்டார். ஆகவே, அவருடைய கர்ப்பத்தில் நம்முடைய ரூஹிலிருந்து ஊதினோம். அவர் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவராகவும் இருந்தார். ([௬௬] ஸூரத்துத் தஹ்ரீம்: ௧௨)
Tafseer