Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௧௨

Qur'an Surah At-Talaq Verse 12

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௧௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَللّٰهُ الَّذِيْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّۗ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ەۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ࣖ (الطلاق : ٦٥)

al-lahu alladhī
ٱللَّهُ ٱلَّذِى
Allah (is) He Who
அல்லாஹ்தான்
khalaqa
خَلَقَ
created
படைத்தான்
sabʿa samāwātin
سَبْعَ سَمَٰوَٰتٍ
seven heavens
ஏழு வானங்களையும்
wamina l-arḍi
وَمِنَ ٱلْأَرْضِ
and of the earth
இன்னும் பூமியில்
mith'lahunna
مِثْلَهُنَّ
(the) like of them
அவைப் போன்றதையும்
yatanazzalu
يَتَنَزَّلُ
Descends
இறங்குகின்றன
l-amru
ٱلْأَمْرُ
the command
கட்டளைகள்
baynahunna
بَيْنَهُنَّ
between them
அவற்றுக்கு மத்தியில்
litaʿlamū
لِتَعْلَمُوٓا۟
that you may know
நீங்கள் அறிவதற்காக
anna l-laha
أَنَّ ٱللَّهَ
that Allah
நிச்சயமாக அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) on every thing
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
All-Powerful
பேராற்றலுடையவன்
wa-anna l-laha
وَأَنَّ ٱللَّهَ
And that Allah
இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
qad
قَدْ
indeed
திட்டமாக
aḥāṭa
أَحَاطَ
encompasses
சூழ்ந்துள்ளான்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
all things
எல்லாப் பொருள்களையும்
ʿil'man
عِلْمًۢا
(in) knowledge
அறிவால்

Transliteration:

Allaahul lazee khalaq Sab'a Samaawaatinw wa minal ardi mislahunna yatanazzalul amru bainahunna lita'lamooo annal laaha 'alaa kulli shai'in Qadeerunw wa annal laaha qad ahaata bikulli shai'in ilmaa (QS. aṭ-Ṭalāq̈:12)

English Sahih International:

It is Allah who has created seven heavens and of the earth, the like of them. [His] command descends among them so you may know that Allah is over all things competent and that Allah has encompassed all things in knowledge. (QS. At-Talaq, Ayah ௧௨)

Abdul Hameed Baqavi:

ஏழு வானங்களையும், அவைகளைப் போல் பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவைகளை படைத்தான். (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௧௨)

Jan Trust Foundation

அல்லாஹ் தான் ஏழு வானங்களையும் இன்னும் பூமியிலிருந்து அவற்றைப் போலவும் படைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால் எல்லாப் பொருளையும் சூழ்ந்தறிகிறான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக, அவற்றின் (வானங்கள், பூமியின்) இடையே அவன் கட்டளையிறங்கிக் கொண்டேயிருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் படைத்தான். இன்னும் பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கின்றான்).