Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தலாஃக் வசனம் ௧௦

Qur'an Surah At-Talaq Verse 10

ஸூரத்துத் தலாஃக் [௬௫]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا ۖفَاتَّقُوا اللّٰهَ يٰٓاُولِى الْاَلْبَابِۛ الَّذِيْنَ اٰمَنُوْا ۛ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكُمْ ذِكْرًاۙ (الطلاق : ٦٥)

aʿadda
أَعَدَّ
Has prepared
தயார் செய்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
lahum
لَهُمْ
for them
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
a punishment
தண்டனையை
shadīdan
شَدِيدًاۖ
severe
கடுமையான
fa-ittaqū
فَٱتَّقُوا۟
So fear
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்வை
yāulī l-albābi
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
O men (of) understanding
அறிவுடையவர்களே!
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟ۚ
those who have believed!
நம்பிக்கை கொண்டவர்கள்
qad
قَدْ
Indeed
திட்டமாக
anzala
أَنزَلَ
Has sent down
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
Allah
அல்லாஹ்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்களுக்கு
dhik'ran
ذِكْرًا
a Message
நல்லுபதேசத்தை

Transliteration:

A'addal laahu lahum 'azaaban shadeedan fattaqul laaha yaaa ulil albaab, allazeena aammanoo; qad anzalal laahu ilaikum zikraa (QS. aṭ-Ṭalāq̈:10)

English Sahih International:

Allah has prepared for them a severe punishment; so fear Allah, O you of understanding who have believed. Allah has sent down to you a message [i.e., the Quran]. (QS. At-Talaq, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

(அன்றி, மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திருக்குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக் கின்றான். (ஸூரத்துத் தலாஃக், வசனம் ௧௦)

Jan Trust Foundation

அல்லாஹ் (அவர்களுக்குக்) கடினமான வேதனையை (மறுமையில்) சித்தம் செய்திருக்கின்றான்; ஆகவே, ஈமான் கொண்டுள்ள அறிவுடையோரே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - திட்டமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவுறுத்தும் இவ்வுபதேசத்தை இறக்கி வைத்திருக்கின்றான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அல்லாஹ் அவர்களுக்கு (-அவ்வூர்வாசிகளுக்கு) கடுமையான தண்டனையை தயார் செய்துள்ளான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவுடையவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு திட்டமாக நல்லுபதேசத்தை இறக்கினான்.