௧௧
رَّسُوْلًا يَّتْلُوْا عَلَيْكُمْ اٰيٰتِ اللّٰهِ مُبَيِّنٰتٍ لِّيُخْرِجَ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ مِنَ الظُّلُمٰتِ اِلَى النُّوْرِۗ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًا يُّدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ قَدْ اَحْسَنَ اللّٰهُ لَهٗ رِزْقًا ١١
- rasūlan
- رَّسُولًا
- ஒரு தூதரை
- yatlū
- يَتْلُوا۟
- ஓதிக் காண்பிக்கிறார்
- ʿalaykum
- عَلَيْكُمْ
- உங்களுக்கு
- āyāti
- ءَايَٰتِ
- வசனங்களை
- l-lahi
- ٱللَّهِ
- அல்லாஹ்வின்
- mubayyinātin
- مُبَيِّنَٰتٍ
- தெளிவான(வை)
- liyukh'rija
- لِّيُخْرِجَ
- வெளியேற்றுவதற்காக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- āmanū
- ءَامَنُوا۟
- நம்பிக்கை கொண்டனர்
- waʿamilū
- وَعَمِلُوا۟
- இன்னும் செய்தார்கள்
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- நன்மைகளை
- mina l-ẓulumāti
- مِنَ ٱلظُّلُمَٰتِ
- இருள்களிலிருந்து
- ilā l-nūri
- إِلَى ٱلنُّورِۚ
- ஒளியின் பக்கம்
- waman yu'min
- وَمَن يُؤْمِنۢ
- எவர்(கள்)/நம்பிக்கை கொண்டார்(கள்)
- bil-lahi
- بِٱللَّهِ
- அல்லாஹ்வை
- wayaʿmal
- وَيَعْمَلْ
- இன்னும் செய்வார்(கள்)
- ṣāliḥan
- صَٰلِحًا
- நன்மையை
- yud'khil'hu
- يُدْخِلْهُ
- அவர்களை பிரவேசிக்கவைப்பான்
- jannātin
- جَنَّٰتٍ
- சொர்க்கங்களில்
- tajrī
- تَجْرِى
- ஓடும்
- min taḥtihā
- مِن تَحْتِهَا
- அவற்றின் கீழ்
- l-anhāru
- ٱلْأَنْهَٰرُ
- நதிகள்
- khālidīna
- خَٰلِدِينَ
- நிரந்தரமாகத் தங்குவார்கள்
- fīhā abadan
- فِيهَآ أَبَدًاۖ
- அவற்றில்/எப்போதும்
- qad
- قَدْ
- திட்டமாக
- aḥsana
- أَحْسَنَ
- அழகாக வைத்திருக்கின்றான்
- l-lahu
- ٱللَّهُ
- அல்லாஹ்
- lahu
- لَهُۥ
- அவர்களுக்கு
- riz'qan
- رِزْقًا
- வாழ்வாதாரத்தை
அன்றி, ஒரு தூதரையும் (அனுப்பி வைத்திருக்கின்றான்). அவர் அல்லாஹ்வுடைய தெளிவான வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்து, (உங்களில்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, இருள்களில் இருந்து பிரகாசத்தின் பக்கம் கொண்டு வருகின்றார். ஆகவே, (உங்களில்) எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ, அவர்களை சுவனபதிகளில் புகச் செய்வான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகான அருளே புரிவான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧௧)Tafseer
௧௨
اَللّٰهُ الَّذِيْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ وَّمِنَ الْاَرْضِ مِثْلَهُنَّۗ يَتَنَزَّلُ الْاَمْرُ بَيْنَهُنَّ لِتَعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ەۙ وَّاَنَّ اللّٰهَ قَدْ اَحَاطَ بِكُلِّ شَيْءٍ عِلْمًا ࣖ ١٢
- al-lahu alladhī
- ٱللَّهُ ٱلَّذِى
- அல்லாஹ்தான்
- khalaqa
- خَلَقَ
- படைத்தான்
- sabʿa samāwātin
- سَبْعَ سَمَٰوَٰتٍ
- ஏழு வானங்களையும்
- wamina l-arḍi
- وَمِنَ ٱلْأَرْضِ
- இன்னும் பூமியில்
- mith'lahunna
- مِثْلَهُنَّ
- அவைப் போன்றதையும்
- yatanazzalu
- يَتَنَزَّلُ
- இறங்குகின்றன
- l-amru
- ٱلْأَمْرُ
- கட்டளைகள்
- baynahunna
- بَيْنَهُنَّ
- அவற்றுக்கு மத்தியில்
- litaʿlamū
- لِتَعْلَمُوٓا۟
- நீங்கள் அறிவதற்காக
- anna l-laha
- أَنَّ ٱللَّهَ
- நிச்சயமாக அல்லாஹ்
- ʿalā kulli shayin
- عَلَىٰ كُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்கள் மீதும்
- qadīrun
- قَدِيرٌ
- பேராற்றலுடையவன்
- wa-anna l-laha
- وَأَنَّ ٱللَّهَ
- இன்னும் நிச்சயமாக அல்லாஹ்
- qad
- قَدْ
- திட்டமாக
- aḥāṭa
- أَحَاطَ
- சூழ்ந்துள்ளான்
- bikulli shayin
- بِكُلِّ شَىْءٍ
- எல்லாப் பொருள்களையும்
- ʿil'man
- عِلْمًۢا
- அறிவால்
ஏழு வானங்களையும், அவைகளைப் போல் பூமியையும் அல்லாஹ் தான் படைத்தான். இவைகளில் (தினசரி நிகழக்கூடிய) எல்லா விஷயங்களைப் பற்றிய கட்டளை இறங்கிக்கொண்டே இருக்கின்றது. (ஆகவே, நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக அல்லாஹ் சகலவற்றின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் தன் ஞானத்தால், எல்லாவற்றையும் ஆழமாக அறிந்துகொண்டிருக்கின்றான் என்பதையும் நீங்கள் திட்டமாக அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இவைகளை படைத்தான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧௨)Tafseer