Skip to content

ஸூரா ஸூரத்துத் தலாஃக் - Word by Word

At-Talaq

(aṭ-Ṭalāq̈)

bismillaahirrahmaanirrahiim

يٰٓاَيُّهَا النَّبِيُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَاۤءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّآ اَنْ يَّأْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍۗ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ ۗوَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ۗ لَا تَدْرِيْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰلِكَ اَمْرًا ١

yāayyuhā l-nabiyu
يَٰٓأَيُّهَا ٱلنَّبِىُّ
நபியே!
idhā ṭallaqtumu
إِذَا طَلَّقْتُمُ
நீங்கள் விவாகரத்து செய்தால்
l-nisāa
ٱلنِّسَآءَ
பெண்களை
faṭalliqūhunna
فَطَلِّقُوهُنَّ
அவர்களை விவாகரத்து செய்யுங்கள்
liʿiddatihinna
لِعِدَّتِهِنَّ
அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு
wa-aḥṣū
وَأَحْصُوا۟
இன்னும் சரியாக கணக்கிடுங்கள்
l-ʿidata
ٱلْعِدَّةَۖ
இத்தாவை
wa-ittaqū
وَٱتَّقُوا۟
இன்னும் அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
rabbakum
رَبَّكُمْۖ
உங்கள் இறைவனாகிய
lā tukh'rijūhunna
لَا تُخْرِجُوهُنَّ
அவர்களை வெளியேற்றாதீர்கள்
min buyūtihinna
مِنۢ بُيُوتِهِنَّ
அவர்களின் இல்லங்களில் இருந்து
walā yakhruj'na
وَلَا يَخْرُجْنَ
இன்னும் அவர்களும் வெளியேற வேண்டாம்
illā an yatīna
إِلَّآ أَن يَأْتِينَ
அவர்கள் செய்தாலே தவிர
bifāḥishatin
بِفَٰحِشَةٍ
தீய செயலை
mubayyinatin
مُّبَيِّنَةٍۚ
தெளிவான
watil'ka
وَتِلْكَ
இவை
ḥudūdu
حُدُودُ
சட்டங்களாகும்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வின்
waman yataʿadda
وَمَن يَتَعَدَّ
எவர்/மீறுவாரோ
ḥudūda
حُدُودَ
சட்டங்களை
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
faqad
فَقَدْ
திட்டமாக
ẓalama
ظَلَمَ
அநீதி இழைத்துக் கொண்டார்
nafsahu
نَفْسَهُۥۚ
தனக்குத் தானே
lā tadrī
لَا تَدْرِى
நீர் அறியமாட்டீர்
laʿalla l-laha yuḥ'dithu
لَعَلَّ ٱللَّهَ يُحْدِثُ
அல்லாஹ் ஏற்படுத்தலாம்
baʿda dhālika
بَعْدَ ذَٰلِكَ
இதற்குப் பின்னர்
amran
أَمْرًا
ஒரு காரியத்தை
நபியே! (நம்பிக்கையாளர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) "நீங்கள் உங்கள் மனைவிகளை தலாக்கு (விவாகப் பிரிவினை) கூற விரும்பினால், அவர்களுடைய "இத்தா"வின் ஆரம்பத்தில் கூறி, இத்தாவைக் கணக்கிட்டு வாருங்கள். (இவ்விஷயத்தில்) உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து நடந்து கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் பகிரங்கமாக யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்களுடைய) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றிவிட வேண்டாம். அவர்களும் வெளியேறிவிட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ்வுடைய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர். (இதிலுள்ள நன்மையை நீங்கள் அறியமாட்டீர்கள். தலாக் கூறிய) பின்னரும், (நீங்கள் சேர்ந்து வாழ) உங்களுக் கிடையில் (சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்திவிடவும் கூடும். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧)
Tafseer

فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَيْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِيْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ ۗذٰلِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ ەۗ وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ ٢

fa-idhā balaghna
فَإِذَا بَلَغْنَ
அவர்கள் அடைந்து விட்டால்
ajalahunna
أَجَلَهُنَّ
தங்கள் தவணையை
fa-amsikūhunna
فَأَمْسِكُوهُنَّ
தடுத்து வையுங்கள் அவர்களை
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
aw
أَوْ
அல்லது
fāriqūhunna
فَارِقُوهُنَّ
நீங்கள் பிரிந்து விடுங்கள் அவர்களை
bimaʿrūfin
بِمَعْرُوفٍ
நல்ல முறையில்
wa-ashhidū
وَأَشْهِدُوا۟
இன்னும் சாட்சியாக்குங்கள்
dhaway ʿadlin
ذَوَىْ عَدْلٍ
நீதமான இருவரை
minkum
مِّنكُمْ
உங்களில்
wa-aqīmū
وَأَقِيمُوا۟
இன்னும் நிலை நிறுத்துங்கள்
l-shahādata
ٱلشَّهَٰدَةَ
சாட்சியத்தை
lillahi
لِلَّهِۚ
அல்லாஹ்விற்காக
dhālikum
ذَٰلِكُمْ
இவை
yūʿaẓu
يُوعَظُ
உபதேசிக்கப் படுகின்றார்
bihi
بِهِۦ
இவற்றின் மூலம்
man kāna yu'minu
مَن كَانَ يُؤْمِنُ
எவர்/நம்பிக்கை கொண்டிருப்பாரோ
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
wal-yawmi l-ākhiri
وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ
மறுமை நாளையும்
waman
وَمَن
எவர்
yattaqi
يَتَّقِ
அஞ்சுவாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yajʿal
يَجْعَل
ஏற்படுத்துவான்
lahu
لَّهُۥ
அவருக்கு
makhrajan
مَخْرَجًا
ஒரு தீர்வை
அப்பெண்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை அடைந்தால், நேரான முறையில் அவர்களை (மனைவியாகவே) நிறுத்திக்கொள்ளுங்கள். அல்லது நேரான முறையில் அவர்களை நீக்கிவிடுங்கள். (இவ்விரண்டில் நீங்கள் எதைச் செய்தபோதிலும் அதற்கு) உங்களில் நீதமான இரு சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (அந்த சாட்சிகள், சாட்சி சொல்ல வந்தால்) அல்லாஹ்வுக்காக உண்மையையே கூறவும். உங்களில் எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றாரோ, அவருக்கு இந்நல்லுபதேசம் கூறப்படுகின்றது. (தவிர, இவ்விஷயத்தில்) எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்) வழியை ஏற்படுத்தித் தருவான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௨)
Tafseer

وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُۗ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَى اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ۗاِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖۗ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا ٣

wayarzuq'hu
وَيَرْزُقْهُ
இன்னும் அவருக்கு உணவளிப்பான்
min ḥaythu
مِنْ حَيْثُ
விதத்தில் இருந்து
lā yaḥtasibu
لَا يَحْتَسِبُۚ
அவர் எண்ணாத
waman yatawakkal
وَمَن يَتَوَكَّلْ
எவர் நம்பிக்கை வைப்பாரோ
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
fahuwa
فَهُوَ
அவனே
ḥasbuhu
حَسْبُهُۥٓۚ
அவருக்குப் போதுமானவன்
inna l-laha
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
bālighu
بَٰلِغُ
நிறைவேற்றுவான்
amrihi
أَمْرِهِۦۚ
தனது காரியத்தை
qad
قَدْ
திட்டமாக
jaʿala
جَعَلَ
ஏற்படுத்தினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
likulli shayin
لِكُلِّ شَىْءٍ
ஒவ்வொன்றுக்கும்
qadran
قَدْرًا
ஓர் அளவை
அன்றி, அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகின்றார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ்தான் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௩)
Tafseer

وَالّٰۤـِٔيْ يَىِٕسْنَ مِنَ الْمَحِيْضِ مِنْ نِّسَاۤىِٕكُمْ اِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلٰثَةُ اَشْهُرٍۙ وَّالّٰۤـِٔيْ لَمْ يَحِضْنَۗ وَاُولَاتُ الْاَحْمَالِ اَجَلُهُنَّ اَنْ يَّضَعْنَ حَمْلَهُنَّۗ وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مِنْ اَمْرِهٖ يُسْرًا ٤

wa-allāī
وَٱلَّٰٓـِٔى
எவர்கள்
ya-is'na
يَئِسْنَ
நிராசை அடைந்து விட்டனரோ
mina l-maḥīḍi
مِنَ ٱلْمَحِيضِ
மாதவிடாயிலிருந்து
min nisāikum
مِن نِّسَآئِكُمْ
உங்கள் பெண்களில்
ini ir'tabtum
إِنِ ٱرْتَبْتُمْ
நீங்கள் சந்தேகித்தால்
faʿiddatuhunna
فَعِدَّتُهُنَّ
அவர்களின் இத்தா
thalāthatu
ثَلَٰثَةُ
மூன்று
ashhurin
أَشْهُرٍ
மாதங்களாகும்
wa-allāī
وَٱلَّٰٓـِٔى
எவர்கள்
lam yaḥiḍ'na
لَمْ يَحِضْنَۚ
அவர்கள் மாதவிடாய் வரவில்லை
wa-ulātu l-aḥmāli
وَأُو۟لَٰتُ ٱلْأَحْمَالِ
கர்ப்பமுடைய பெண்கள்
ajaluhunna
أَجَلُهُنَّ
அவர்களின் தவணை
an yaḍaʿna
أَن يَضَعْنَ
அவர்கள் பெற்றெடுப்பதாகும்
ḥamlahunna
حَمْلَهُنَّۚ
தங்கள் கர்ப்பத்தை
waman
وَمَن
எவர்
yattaqi
يَتَّقِ
அஞ்சுவாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yajʿal
يَجْعَل
ஏற்படுத்துவான்
lahu
لَّهُۥ
அவருக்கு
min amrihi
مِنْ أَمْرِهِۦ
அவரின் காரியத்தில்
yus'ran
يُسْرًا
இலகுவை
(தலாக் சொல்லப்பட்ட) உங்கள் மனைவிகளில் எவர்கள் (அதிக வயதாகி) மாதவிடாயின் நம்பிக்கையிழந்து, (இத்தாவைக் கணக்கிட) என்ன செய்வதென்று நீங்கள் சந்தேகத்திற்கு உள்ளாகிவிட்டால், அத்தகைய பெண்களுக்கும், இன்னும் எவர்களுக்கு இதுவரையில் மாதவிடாய் ஏற்படவில்லையோ அவர்களுக்கும், இத்தாவின் தவணை மூன்று மாதங்களாகும். கர்ப்பமான பெண்களுக்கு இத்தாவின் தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையில் இருக்கின்றது. எவர்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றார்களோ, அவர்களுடைய காரியத்தை அவர்களுக்கு எளிதாக்கி விடுகின்றான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௪)
Tafseer

ذٰلِكَ اَمْرُ اللّٰهِ اَنْزَلَهٗٓ اِلَيْكُمْۗ وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُعْظِمْ لَهٗٓ اَجْرًا ٥

dhālika amru
ذَٰلِكَ أَمْرُ
இது/கட்டளையாகும்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
anzalahu
أَنزَلَهُۥٓ
இதை இறக்கி இருக்கின்றான்
ilaykum
إِلَيْكُمْۚ
உங்களுக்கு
waman yattaqi
وَمَن يَتَّقِ
எவர்/அஞ்சுவாரோ
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yukaffir
يُكَفِّرْ
அவன் போக்குவான்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டும்
sayyiātihi
سَيِّـَٔاتِهِۦ
அவரின் பாவங்களை
wayuʿ'ẓim
وَيُعْظِمْ
இன்னும் பெரிதாக்குவான்
lahu ajran
لَهُۥٓ أَجْرًا
அவருக்கு/கூலியை
அல்லாஹ் உங்களுக்கு இறக்கிவைத்த கட்டளை இதுதான். ஆகவே, எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்கின்றாரோ, அவருடைய பாவங்களை அவன் மன்னித்து, அவருடைய கூலியையும் பெரிதாக்கி விடுகின்றான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௫)
Tafseer

اَسْكِنُوْهُنَّ مِنْ حَيْثُ سَكَنْتُمْ مِّنْ وُّجْدِكُمْ وَلَا تُضَاۤرُّوْهُنَّ لِتُضَيِّقُوْا عَلَيْهِنَّۗ وَاِنْ كُنَّ اُولَاتِ حَمْلٍ فَاَنْفِقُوْا عَلَيْهِنَّ حَتّٰى يَضَعْنَ حَمْلَهُنَّۚ فَاِنْ اَرْضَعْنَ لَكُمْ فَاٰتُوْهُنَّ اُجُوْرَهُنَّۚ وَأْتَمِرُوْا بَيْنَكُمْ بِمَعْرُوْفٍۚ وَاِنْ تَعَاسَرْتُمْ فَسَتُرْضِعُ لَهٗٓ اُخْرٰىۗ ٦

askinūhunna
أَسْكِنُوهُنَّ
அவர்களை தங்க வையுங்கள்
min ḥaythu sakantum
مِنْ حَيْثُ سَكَنتُم
நீங்கள் தங்கும் இடத்தில்
min wuj'dikum
مِّن وُجْدِكُمْ
உங்கள் வசதிக்கேற்ப
walā
وَلَا
தீங்கு செய்யாதீர்கள்
tuḍārrūhunna
تُضَآرُّوهُنَّ
தீங்கு செய்யாதீர்கள் அவர்களுக்கு
lituḍayyiqū
لِتُضَيِّقُوا۟
நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக
ʿalayhinna
عَلَيْهِنَّۚ
அவர்கள் மீது
wa-in kunna
وَإِن كُنَّ
அவர்கள் இருந்தால்
ulāti ḥamlin
أُو۟لَٰتِ حَمْلٍ
கர்ப்பம் உள்ள பெண்களாக
fa-anfiqū
فَأَنفِقُوا۟
செலவு செய்யுங்கள்
ʿalayhinna
عَلَيْهِنَّ
அவர்களுக்கு
ḥattā
حَتَّىٰ
வரை
yaḍaʿna
يَضَعْنَ
அவர்கள் பெற்றெடுக்கின்ற
ḥamlahunna
حَمْلَهُنَّۚ
தங்கள் கர்ப்பத்தை
fa-in arḍaʿna
فَإِنْ أَرْضَعْنَ
அவர்கள் பாலூட்டினால்
lakum
لَكُمْ
உங்களுக்காக
faātūhunna
فَـَٔاتُوهُنَّ
அவர்களுக்கு கொடுங்கள்
ujūrahunna
أُجُورَهُنَّۖ
அவர்களின் ஊதியங்களை
watamirū
وَأْتَمِرُوا۟
ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்
baynakum
بَيْنَكُم
உங்களுக்கு மத்தியில்
bimaʿrūfin
بِمَعْرُوفٍۖ
நல்லதை
wa-in taʿāsartum
وَإِن تَعَاسَرْتُمْ
நீங்கள் சிரமமாகக் கருதினால்
fasatur'ḍiʿu
فَسَتُرْضِعُ
பாலூட்டுவாள்
lahu
لَهُۥٓ
அவருக்காக
ukh'rā
أُخْرَىٰ
வேறு ஒரு பெண்
("தலாக்" கூறிய பின்னர் இத்தா இருக்கவேண்டிய உங்களுடைய) பெண்களை உங்களால் ஆனவரையில், நீங்கள் இருக்கும் இடத்திலேயே வசித்திருக்கும்படி செய்யுங்கள். அவர்களை நிர்ப்பந்திக்கக் கருதி அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கர்ப்பமான பெண்களாயிருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரையில் அவர்களுக்குச் செலவுக்குக் கொடுத்து வாருங்கள். (பிரசவித்ததன்) பின்னர் (குழந்தைக்கு) உங்களுக்காக அவர்கள் பாலூட்டினால் அதற்குரிய கூலியை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி முன்னதாகவே) உங்களுக்குள் முறையாக பேசி முடிவு செய்துகொள்ளுங்கள். இதில் உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால், (அக்குழந்தைக்கு) மற்றவளைக் கொண்டும் பால் கொடுக்கலாம். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௬)
Tafseer

لِيُنْفِقْ ذُوْ سَعَةٍ مِّنْ سَعَتِهٖۗ وَمَنْ قُدِرَ عَلَيْهِ رِزْقُهٗ فَلْيُنْفِقْ مِمَّآ اٰتٰىهُ اللّٰهُ ۗ لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا مَآ اٰتٰىهَاۗ سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا ࣖ ٧

liyunfiq
لِيُنفِقْ
செலவு செய்யட்டும்
dhū saʿatin
ذُو سَعَةٍ
வசதியுடையவர்
min saʿatihi
مِّن سَعَتِهِۦۖ
தனது வசதியிலிருந்து
waman
وَمَن
எவர் ஒருவர்
qudira
قُدِرَ
நெருக்கடியாக இருக்கின்றதோ
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
riz'quhu
رِزْقُهُۥ
அவருடைய வாழ்வாதாரம்
falyunfiq
فَلْيُنفِقْ
அவர்கள் செலவு செய்யட்டும்
mimmā ātāhu
مِمَّآ ءَاتَىٰهُ
தனக்கு கொடுத்ததில் இருந்து
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
lā yukallifu
لَا يُكَلِّفُ
சிரமம் கொடுக்க மாட்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
nafsan
نَفْسًا
ஓர் ஆன்மாவிற்கு
illā
إِلَّا
தவிர
mā ātāhā
مَآ ءَاتَىٰهَاۚ
அவன் அதற்கு கொடுத்ததை
sayajʿalu
سَيَجْعَلُ
ஏற்படுத்துவான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
baʿda
بَعْدَ
பின்னர்
ʿus'rin
عُسْرٍ
சிரமத்திற்கு
yus'ran
يُسْرًا
இலகுவை
(பால் குடிப்பாட்ட செலவு செய்யும் விஷயத்தில்) வசதியுடையவர் தன்னுடைய தகுதிக்குத் தக்கவாறு (தாராளமாகச்) செலவு செய்யவும். ஏழ்மையானவர், அல்லாஹ் அவருக்குக் கொடுத்ததிலிருந்துதான் செலவு செய்வார். எம்மனிதனையும் அல்லாஹ் அவனுக்குக் கொடுத்ததற்கு அதிகமாக(ச் செலவு செய்யும்படி) நிர்ப்பந்திப்பதில்லை. சிரமத்திற்குப் பின்னர், அல்லாஹ் அதிசீக்கிரத்தில் இலகுவை கொடுத்துவிடுவான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௭)
Tafseer

وَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ عَتَتْ عَنْ اَمْرِ رَبِّهَا وَرُسُلِهٖ فَحَاسَبْنٰهَا حِسَابًا شَدِيْدًاۙ وَّعَذَّبْنٰهَا عَذَابًا نُّكْرًا ٨

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min qaryatin ʿatat
مِّن قَرْيَةٍ عَتَتْ
ஊர்கள்/மீறின
ʿan amri
عَنْ أَمْرِ
கட்டளையையும்
rabbihā
رَبِّهَا
தமது இறைவனின்
warusulihi
وَرُسُلِهِۦ
இன்னும் தமது தூதரின்
faḥāsabnāhā
فَحَاسَبْنَٰهَا
நாம் அவற்றை விசாரித்தோம்
ḥisāban
حِسَابًا
விசாரணையால்
shadīdan
شَدِيدًا
கடுமையான
waʿadhabnāhā
وَعَذَّبْنَٰهَا
இன்னும் அவற்றை வேதனை செய்தோம்
ʿadhāban nuk'ran
عَذَابًا نُّكْرًا
மோசமான தண்டனையால்
எத்தனையோ ஊர்வாசிகள் தங்கள் இறைவனின் கட்டளைக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மாறுசெய்தனர். ஆதலால், அவர்களை நாம் வெகு கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்டு, அவர்களை மிகக் கடினமான வேதனையை கொண்டு வேதனை செய்தோம். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௮)
Tafseer

فَذَاقَتْ وَبَالَ اَمْرِهَا وَكَانَ عَاقِبَةُ اَمْرِهَا خُسْرًا ٩

fadhāqat
فَذَاقَتْ
அவை சுவைத்தன
wabāla
وَبَالَ
கெட்ட முடிவை
amrihā
أَمْرِهَا
தமது காரியத்தின்
wakāna
وَكَانَ
இன்னும் ஆகிவிட்டது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
amrihā
أَمْرِهَا
அவற்றின் காரியத்தின்
khus'ran
خُسْرًا
மிக நஷ்டமாகவே
ஆகவே, அவர்களின் தீய செயலுக்குரிய பலனை அவர்கள் அனுபவித்தனர். அவர்களின் (தீய) காரியங்களின் முடிவு (இம்மையிலும்) நஷ்டமாகவே ஆயிற்று. ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௯)
Tafseer
௧௦

اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا ۖفَاتَّقُوا اللّٰهَ يٰٓاُولِى الْاَلْبَابِۛ الَّذِيْنَ اٰمَنُوْا ۛ قَدْ اَنْزَلَ اللّٰهُ اِلَيْكُمْ ذِكْرًاۙ ١٠

aʿadda
أَعَدَّ
தயார் செய்துள்ளான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ʿadhāban
عَذَابًا
தண்டனையை
shadīdan
شَدِيدًاۖ
கடுமையான
fa-ittaqū
فَٱتَّقُوا۟
ஆகவே, அஞ்சுங்கள்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வை
yāulī l-albābi
يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
அறிவுடையவர்களே!
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டவர்கள்
qad
قَدْ
திட்டமாக
anzala
أَنزَلَ
இறக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
dhik'ran
ذِكْرًا
நல்லுபதேசத்தை
(அன்றி, மறுமையில்) அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான வேதனையை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவாளிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு(த் திருக்குர்ஆன் என்னும்) நல்லுபதேசத்தை இறக்கி வைத்திருக் கின்றான். ([௬௫] ஸூரத்துத் தலாஃக்: ௧௦)
Tafseer