Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௯

Qur'an Surah At-Taghabun Verse 9

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذٰلِكَ يَوْمُ التَّغَابُنِۗ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًا يُّكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ (التغابن : ٦٤)

yawma
يَوْمَ
(The) Day
நாளை
yajmaʿukum
يَجْمَعُكُمْ
He will assemble you
அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
liyawmi
لِيَوْمِ
for (the) Day
நாளுக்காக
l-jamʿi
ٱلْجَمْعِۖ
(of) the Assembly
ஒன்று சேர்க்கப்படும்
dhālika yawmu
ذَٰلِكَ يَوْمُ
that (will be the) Day
அதுதான்/நாளாகும்
l-taghābuni
ٱلتَّغَابُنِۗ
(of) mutual loss and gain
ஏமாறுகின்ற
waman
وَمَن
And whoever
யார்
yu'min
يُؤْمِنۢ
believes
நம்பிக்கை கொள்வார்(கள்)
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
wayaʿmal
وَيَعْمَلْ
and does
இன்னும் செய்வார்(கள்)
ṣāliḥan
صَٰلِحًا
righteousness
நன்மையை
yukaffir
يُكَفِّرْ
He will remove
போக்கிவிடுவான்
ʿanhu
عَنْهُ
from him
அவர்களை விட்டும்
sayyiātihi
سَيِّـَٔاتِهِۦ
his misdeeds
அவர்களின் பாவங்களை
wayud'khil'hu
وَيُدْخِلْهُ
and He will admit him
இன்னும் அவர்களை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
(to) Gardens
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
flow
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
from underneath it
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
the rivers
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
abiding
நிரந்தரமாக இருப்பார்கள்
fīhā
فِيهَآ
therein
அவற்றில்
abadan
أَبَدًاۚ
forever
எப்போதும்
dhālika
ذَٰلِكَ
That
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
(is) the success
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
the great
மகத்தான

Transliteration:

Ywma yajma'ukum li yawmil jam'i zaalika yawmut taghaabun; wa many-yumim billaahi wa ya'mal saalihany yukaffir 'anhu sayyi aatihee wa yudkhilhu jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaaa abadaa; zaalikal fawzul 'azeem (QS. at-Taghābun:9)

English Sahih International:

The Day He will assemble you for the Day of Assembly – that is the Day of Deprivation. And whoever believes in Allah and does righteousness – He will remove from him his misdeeds and admit him to gardens beneath which rivers flow, wherein they will abide forever. That is the great attainment. (QS. At-Taghabun, Ayah ௯)

Abdul Hameed Baqavi:

ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றாரோ, அவருடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் அவரைப் புகுத்தி விடுகின்றான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தானதொரு வெற்றியாகும். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௯)

Jan Trust Foundation

ஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும்; ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். அவர்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.