Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௪

Qur'an Surah At-Taghabun Verse 4

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (التغابن : ٦٤)

yaʿlamu
يَعْلَمُ
He knows
அவன் நன்கறிவான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
what (is) in the heavens
வானங்களில் உள்ளவற்றை
wal-arḍi
وَٱلْأَرْضِ
and the earth
இன்னும் பூமியில்
wayaʿlamu
وَيَعْلَمُ
and He knows
இன்னும் நன்கறிவான்
mā tusirrūna
مَا تُسِرُّونَ
what you conceal
நீங்கள் மறைப்பதையும்
wamā tuʿ'linūna
وَمَا تُعْلِنُونَۚ
and what you declare
நீங்கள் வெளிப்படுத்துவதையும்
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
(is) All-Knowing
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
of what (is in) the breasts
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Transliteration:

Ya'lamu maa fis samaawaati wal ardi wa ya'lamu maa tusirroona wa maa tu'linoon; wallaahu 'Aleemum bizaatis sudoor (QS. at-Taghābun:4)

English Sahih International:

He knows what is within the heavens and earth and knows what you conceal and what you declare. And Allah is Knowing of that within the breasts. (QS. At-Taghabun, Ayah ௪)

Abdul Hameed Baqavi:

வானங்களில் உள்ளவைகளையும், பூமியில் உள்ளவை களையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகின்றான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவை களையும் அல்லாஹ் நன்கறிகின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௪)

Jan Trust Foundation

வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும்; பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர் களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.