குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௩
Qur'an Surah At-Taghabun Verse 3
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ وَاِلَيْهِ الْمَصِيْرُ (التغابن : ٦٤)
- khalaqa
- خَلَقَ
- He created
- அவன் படைத்தான்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- the heavens
- வானங்களையும்
- wal-arḍa
- وَٱلْأَرْضَ
- and the earth
- பூமியையும்
- bil-ḥaqi
- بِٱلْحَقِّ
- with truth
- உண்மையான காரணத்திற்காக
- waṣawwarakum
- وَصَوَّرَكُمْ
- and He formed you
- இன்னும் உங்களுக்கு உருவமைத்தான்
- fa-aḥsana
- فَأَحْسَنَ
- and made good
- அழகாக்கினான்
- ṣuwarakum
- صُوَرَكُمْۖ
- your forms
- உங்கள் உருவங்களை
- wa-ilayhi
- وَإِلَيْهِ
- and to Him
- அவன் பக்கமே
- l-maṣīru
- ٱلْمَصِيرُ
- (is) the final return
- மீளுமிடம்
Transliteration:
Khalaqas samaawaati wal arda bilhaqqi wa sawwarakum fa ahsana suwarakum wa ilaihil maseer(QS. at-Taghābun:3)
English Sahih International:
He created the heavens and earth in truth and formed you and perfected your forms; and to Him is the [final] destination. (QS. At-Taghabun, Ayah ௩)
Abdul Hameed Baqavi:
உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்றான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதனை மிக அழகாகவும் ஆக்கி வைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௩)
Jan Trust Foundation
வானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான்; அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். அவன் உங்களுக்கு உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீளுமிடம் இருக்கின்றது.