Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௭

Qur'an Surah At-Taghabun Verse 17

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ تُقْرِضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا يُّضٰعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْۗ وَاللّٰهُ شَكُوْرٌ حَلِيْمٌۙ (التغابن : ٦٤)

in tuq'riḍū
إِن تُقْرِضُوا۟
If you loan
நீங்கள் கடன் கொடுத்தால்
l-laha
ٱللَّهَ
(to) Allah
அல்லாஹ்விற்கு
qarḍan
قَرْضًا
a loan
கடனாக
ḥasanan
حَسَنًا
goodly
அழகிய
yuḍāʿif'hu
يُضَٰعِفْهُ
He will multiply it
அதை பன்மடங்காகப் பெருக்குவான்
lakum
لَكُمْ
for you
உங்களுக்கு
wayaghfir
وَيَغْفِرْ
and will forgive
இன்னும் மன்னிப்பான்
lakum
لَكُمْۚ
you
உங்களை
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
shakūrun
شَكُورٌ
(is) Most Appreciative
மிகவும் நன்றியுள்ளவன்
ḥalīmun
حَلِيمٌ
Most Forbearing
மகா சகிப்பாளன்

Transliteration:

In tuqridul laaha qardan hasanany yudd'ifhu lakum wa yaghfir lakum; wallaahu Shakoorun Haleem (QS. at-Taghābun:17)

English Sahih International:

If you loan Allah a goodly loan, He will multiply it for you and forgive you. And Allah is [most] Appreciative and Forbearing, (QS. At-Taghabun, Ayah ௧௭)

Abdul Hameed Baqavi:

அழகான முறையில் அல்லாஹ்வுக்காக நீங்கள் கடன் கொடுத்தால், அதனை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகின்றான். அல்லாஹ் (சொற்ப) நன்றியையும் அங்கீகரிப்பவனாகவும் மிக்க சகிப்பவ னாகவும் இருக்கின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௭)

Jan Trust Foundation

நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான்; அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன்; சகிப்பவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றியுள்ளவன், மகா சகிப்பாளன் ஆவான்.