குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௬
Qur'an Surah At-Taghabun Verse 16
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا وَاَنْفِقُوْا خَيْرًا لِّاَنْفُسِكُمْۗ وَمَنْ يُّوْقَ شُحَّ نَفْسِهٖ فَاُولٰۤىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ (التغابن : ٦٤)
- fa-ittaqū
- فَٱتَّقُوا۟
- So fear
- அஞ்சுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- Allah
- அல்லாஹ்வை
- mā is'taṭaʿtum
- مَا ٱسْتَطَعْتُمْ
- as much as you are able
- உங்களுக்கு முடிந்தளவு
- wa-is'maʿū
- وَٱسْمَعُوا۟
- and listen
- இன்னும் செவி தாழ்த்துங்கள்
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- and obey
- இன்னும் கீழ்ப்படியுங்கள்
- wa-anfiqū
- وَأَنفِقُوا۟
- and spend;
- இன்னும் தர்மம் செய்யுங்கள்
- khayran
- خَيْرًا
- (it is) better
- செல்வத்தை
- li-anfusikum
- لِّأَنفُسِكُمْۗ
- for your souls
- உங்கள் நன்மைக்காக
- waman
- وَمَن
- And whoever
- எவர்(கள்)
- yūqa
- يُوقَ
- is saved
- பாதுகாக்கப்படுவார்(களோ)
- shuḥḥa
- شُحَّ
- (from the) greediness
- கஞ்சத் தனத்தில் இருந்து
- nafsihi
- نَفْسِهِۦ
- (of) his soul
- தமது மனதின்
- fa-ulāika humu
- فَأُو۟لَٰٓئِكَ هُمُ
- then those [they]
- அவர்கள்தான்
- l-muf'liḥūna
- ٱلْمُفْلِحُونَ
- (are) the successful ones
- வெற்றியாளர்கள்
Transliteration:
Fattaqul laaha mastat'tum wasma'oo wa atee'oo waanfiqoo khairal li anfusikum; wa many-yooqa shuha nafsihee fa-ulaaa'ika humul muflihoon(QS. at-Taghābun:16)
English Sahih International:
So fear Allah as much as you are able and listen and obey and spend [in the way of Allah]; it is better for your selves. And whoever is protected from the stinginess of his soul – it is those who will be the successful. (QS. At-Taghabun, Ayah ௧௬)
Abdul Hameed Baqavi:
ஆதலால், உங்களால் சாத்தியமான வரையில் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுக்குச் செவிசாய்த்து வழிப்பட்டு நடந்து, தானமும் செய்யுங்கள். இது உங்களுக்குத்தான் மிக நன்று. எவர்கள் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அத்தகையவர்கள் நிச்சயமாக வெற்றியடைந்து விடுவார்கள். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௬)
Jan Trust Foundation
ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது மனதின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.