குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௪
Qur'an Surah At-Taghabun Verse 14
ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اِنَّ مِنْ اَزْوَاجِكُمْ وَاَوْلَادِكُمْ عَدُوًّا لَّكُمْ فَاحْذَرُوْهُمْۚ وَاِنْ تَعْفُوْا وَتَصْفَحُوْا وَتَغْفِرُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ (التغابن : ٦٤)
- yāayyuhā alladhīna āmanū
- يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟
- O! (you) who! believe!
- நம்பிக்கையாளர்களே!
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- min azwājikum
- مِنْ أَزْوَٰجِكُمْ
- from your spouses
- உங்கள் மனைவிகளிலும்
- wa-awlādikum
- وَأَوْلَٰدِكُمْ
- and your children
- உங்கள் பிள்ளைகளிலும்
- ʿaduwwan
- عَدُوًّا
- (are) enemies
- எதிரிகள்
- lakum
- لَّكُمْ
- to you
- உங்களுக்கு
- fa-iḥ'dharūhum
- فَٱحْذَرُوهُمْۚ
- so beware of them
- ஆகவே அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள்
- wa-in taʿfū
- وَإِن تَعْفُوا۟
- But if you pardon
- நீங்கள் பிழை பொறுத்தால்
- wataṣfaḥū
- وَتَصْفَحُوا۟
- and overlook
- இன்னும் புறக்கணித்தால்
- wataghfirū
- وَتَغْفِرُوا۟
- and forgive
- நீங்கள் மன்னித்தால்
- fa-inna l-laha
- فَإِنَّ ٱللَّهَ
- then indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- ghafūrun
- غَفُورٌ
- (is) Oft-Forgiving
- மகா மன்னிப்பாளன்
- raḥīmun
- رَّحِيمٌ
- Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanooo inna min azwaaji kum wa awlaadikum 'aduwwal lakum fahzaroohum; wa in ta'foo wa tasfahoo wa taghfiroo fa innal laaha ghafoorur Raheem(QS. at-Taghābun:14)
English Sahih International:
O you who have believed, indeed, among your spouses and your children are enemies to you, so beware of them. But if you pardon and overlook and forgive – then indeed, Allah is Forgiving and Merciful. (QS. At-Taghabun, Ayah ௧௪)
Abdul Hameed Baqavi:
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், கிருபையுடையவனுமாக இருக்கின்றான். (உங்களுடைய குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.) (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௪)
Jan Trust Foundation
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர்; எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.