Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧௧

Qur'an Surah At-Taghabun Verse 11

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَآ اَصَابَ مِنْ مُّصِيْبَةٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ۗوَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ يَهْدِ قَلْبَهٗ ۗوَاللّٰهُ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ (التغابن : ٦٤)

mā aṣāba
مَآ أَصَابَ
Not strikes
ஏற்படாது
min muṣībatin
مِن مُّصِيبَةٍ
any disaster
எந்த சோதனையும்
illā bi-idh'ni
إِلَّا بِإِذْنِ
except by (the) permission
அனுமதி இல்லாமல்
l-lahi
ٱللَّهِۗ
(of) Allah
அல்லாஹ்வின்
waman yu'min
وَمَن يُؤْمِنۢ
And whoever believes
யார் நம்பிக்கை கொள்வாரோ
bil-lahi
بِٱللَّهِ
in Allah
அல்லாஹ்வை
yahdi
يَهْدِ
He guides
நேர்வழி காட்டுவான்
qalbahu
قَلْبَهُۥۚ
his heart
அவரின் உள்ளத்திற்கு
wal-lahu
وَٱللَّهُ
And Allah
அல்லாஹ்
bikulli shayin
بِكُلِّ شَىْءٍ
of every thing
எல்லாவற்றையும்
ʿalīmun
عَلِيمٌ
(is) All-Knowing
நன்கறிந்தவன்

Transliteration:

Maaa asaaba mim musee batin illaa bi-iznil laah; wa many yu'mim billaahi yahdi qalbah; wallaahu bikulli shai;in Aleem (QS. at-Taghābun:11)

English Sahih International:

No disaster strikes except by permission of Allah. And whoever believes in Allah – He will guide his heart. And Allah is Knowing of all things. (QS. At-Taghabun, Ayah ௧௧)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வுடைய அனுமதியின்றி யாதொரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧௧)

Jan Trust Foundation

நிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை; மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.