Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் வசனம் ௧

Qur'an Surah At-Taghabun Verse 1

ஸூரத்துத் தஃகாபுன் [௬௪]: ௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ (التغابن : ٦٤)

yusabbiḥu
يُسَبِّحُ
Glorifies
துதிக்கின்றனர்
lillahi
لِلَّهِ
[to] Allah
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
whatever (is) in the heavens
வானங்களில் உள்ளவர்களும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
and whatever (is) in the earth
பூமியில் உள்ளவர்களும்
lahu
لَهُ
For Him
அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُ
(is the) dominion
ஆட்சிகள்
walahu
وَلَهُ
and for Him
இன்னும் அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُۖ
(is) the praise
புகழ் அனைத்தும்
wahuwa
وَهُوَ
And He
அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
(is) on every thing
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
All-powerful
பேராற்றலுடையவன்

Transliteration:

Yusabbihu lillaahi maa fis samaawaati wa maa fil ardi lahul mulku wa lahul hamd, wa Huwa 'alaa kulli shai 'in Qadeer (QS. at-Taghābun:1)

English Sahih International:

Whatever is in the heavens and whatever is on the earth is exalting Allah. To Him belongs dominion, and to Him belongs [all] praise, and He is over all things competent. (QS. At-Taghabun, Ayah ௧)

Abdul Hameed Baqavi:

வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதி செய்துகொண்டே இருக்கின்றன. (இவைகளின்) ஆட்சியும் அவனுக்குறியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. தவிர, அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன். (ஸூரத்துத் தஃகாபுன், வசனம் ௧)

Jan Trust Foundation

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன; அவனுக்கே ஆட்சி உரியது; இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே; அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதிக்கின்றனர். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.