Skip to content

ஸூரா ஸூரத்துத் தஃகாபுன் - Word by Word

At-Taghabun

(at-Taghābun)

bismillaahirrahmaanirrahiim

يُسَبِّحُ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُۖ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ ١

yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கின்றனர்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வை
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவர்களும்
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۖ
பூமியில் உள்ளவர்களும்
lahu
لَهُ
அவனுக்கே
l-mul'ku
ٱلْمُلْكُ
ஆட்சிகள்
walahu
وَلَهُ
இன்னும் அவனுக்கே
l-ḥamdu
ٱلْحَمْدُۖ
புகழ் அனைத்தும்
wahuwa
وَهُوَ
அவன்தான்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாப் பொருள்கள் மீதும்
qadīrun
قَدِيرٌ
பேராற்றலுடையவன்
வானங்களில் உள்ளவைகளும், பூமியில் உள்ளவைகளும் (தொடர்ந்து) அல்லாஹ்வைத் துதி செய்துகொண்டே இருக்கின்றன. (இவைகளின்) ஆட்சியும் அவனுக்குறியதே! ஆகவே, அவனுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. தவிர, அனைத்தின் மீதும் அவன் ஆற்றலுடையவன். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧)
Tafseer

هُوَ الَّذِيْ خَلَقَكُمْ فَمِنْكُمْ كَافِرٌ وَّمِنْكُمْ مُّؤْمِنٌۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ ٢

huwa alladhī khalaqakum
هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ
அவன்தான்/உங்களைப் படைத்தான்
faminkum
فَمِنكُمْ
உங்களில்
kāfirun
كَافِرٌ
நிராகரிப்பாளரும்
waminkum mu'minun
وَمِنكُم مُّؤْمِنٌۚ
இன்னும் உங்களில்/ நம்பிக்கையாளரும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
baṣīrun
بَصِيرٌ
உற்று நோக்குபவன்
அவன்தான் உங்களை படைத்தவன். (அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு. (அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு. நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௨)
Tafseer

خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَصَوَّرَكُمْ فَاَحْسَنَ صُوَرَكُمْۚ وَاِلَيْهِ الْمَصِيْرُ ٣

khalaqa
خَلَقَ
அவன் படைத்தான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களையும்
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
bil-ḥaqi
بِٱلْحَقِّ
உண்மையான காரணத்திற்காக
waṣawwarakum
وَصَوَّرَكُمْ
இன்னும் உங்களுக்கு உருவமைத்தான்
fa-aḥsana
فَأَحْسَنَ
அழகாக்கினான்
ṣuwarakum
صُوَرَكُمْۖ
உங்கள் உருவங்களை
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கமே
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடம்
உண்மையான காரணத்திற்கே வானங்களையும் பூமியையும் படைத்திருக்கின்றான். அவனே உங்கள் உருவத்தை அமைத்து, அதனை மிக அழகாகவும் ஆக்கி வைத்தான். அவனிடம்தான் (நீங்கள் அனைவரும்) செல்ல வேண்டியதிருக்கின்றது. ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௩)
Tafseer

يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَيَعْلَمُ مَا تُسِرُّوْنَ وَمَا تُعْلِنُوْنَۗ وَاللّٰهُ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ ٤

yaʿlamu
يَعْلَمُ
அவன் நன்கறிவான்
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவற்றை
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் நன்கறிவான்
mā tusirrūna
مَا تُسِرُّونَ
நீங்கள் மறைப்பதையும்
wamā tuʿ'linūna
وَمَا تُعْلِنُونَۚ
நீங்கள் வெளிப்படுத்துவதையும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவற்றை
வானங்களில் உள்ளவைகளையும், பூமியில் உள்ளவை களையும் அவன் நன்கறிவதுடன், நீங்கள் இரகசியமாகச் செய்வதையும் நீங்கள் பகிரங்கமாகச் செய்வதையும் அவன் நன்கறிகின்றான். (இது மட்டுமா? உங்கள்) உள்ளங்களில் உள்ளவை களையும் அல்லாஹ் நன்கறிகின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௪)
Tafseer

اَلَمْ يَأْتِكُمْ نَبَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَبْلُ ۖفَذَاقُوْا وَبَالَ اَمْرِهِمْ وَلَهُمْ عَذَابٌ اَلِيْمٌ ٥

alam yatikum
أَلَمْ يَأْتِكُمْ
உங்களுக்கு வரவில்லையா?
naba-u
نَبَؤُا۟
செய்தி
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்களின்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
fadhāqū
فَذَاقُوا۟
அவர்கள் சுவைத்தனர்
wabāla
وَبَالَ
தீய முடிவை
amrihim
أَمْرِهِمْ
தங்கள் காரியத்தின்
walahum
وَلَهُمْ
அவர்களுக்கு
ʿadhābun
عَذَابٌ
தண்டனை
alīmun
أَلِيمٌ
வலி தரக்கூடிய(து)
(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் இருந்த நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் தீய செயலின் பலனை (இவ்வுலகில்) அனுபவித்ததுடன், (மறுமையிலும்) அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு. ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௫)
Tafseer

ذٰلِكَ بِاَنَّهٗ كَانَتْ تَّأْتِيْهِمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ فَقَالُوْٓا اَبَشَرٌ يَّهْدُوْنَنَاۖ فَكَفَرُوْا وَتَوَلَّوْا وَّاسْتَغْنَى اللّٰهُ ۗوَاللّٰهُ غَنِيٌّ حَمِيْدٌ ٦

dhālika bi-annahu
ذَٰلِكَ بِأَنَّهُۥ
அதற்கு காரணம் நிச்சயமாக
kānat tatīhim
كَانَت تَّأْتِيهِمْ
அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர்
rusuluhum
رُسُلُهُم
அவர்களின் தூதர்கள்
bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
தெளிவான அத்தாட்சிகளுடன்
faqālū
فَقَالُوٓا۟
அவர்கள் கூறினார்கள்
abasharun
أَبَشَرٌ
மனிதர்களா?
yahdūnanā
يَهْدُونَنَا
எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்
fakafarū
فَكَفَرُوا۟
ஆகவே, அவர்கள் நிராகரித்தனர்
watawallaw
وَتَوَلَّوا۟ۚ
இன்னும் விலகினார்கள்
wa-is'taghnā
وَّٱسْتَغْنَى
அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்வும்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ghaniyyun
غَنِىٌّ
மகா செல்வந்தன்
ḥamīdun
حَمِيدٌ
மகா புகழுக்குரியவன்
இதன் காரணமாவது: நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுக்காக அனுப்பப்பட்ட (நம்முடைய) தூதர்கள் அவர்களிடம் வந்துகொண்டே இருந்தார்கள். எனினும் அவர்களோ "(நம்மைப் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேரான வழியைக் காட்டிவிடுவார்?" என்று கூறி அவர்களை நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். அல்லாஹ்வும் அவர்களைப் பொருட்படுத்த வில்லை. அல்லாஹ் (இவர்களின்) தேவையற்றவனும், புகழுடைய வனாகவும் இருக்கின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௬)
Tafseer

زَعَمَ الَّذِيْنَ كَفَرُوْٓا اَنْ لَّنْ يُّبْعَثُوْاۗ قُلْ بَلٰى وَرَبِّيْ لَتُبْعَثُنَّ ثُمَّ لَتُنَبَّؤُنَّ بِمَا عَمِلْتُمْۗ وَذٰلِكَ عَلَى اللّٰهِ يَسِيْرٌ ٧

zaʿama
زَعَمَ
பிதற்றுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوٓا۟
நிராகரித்தவர்கள்
an lan yub'ʿathū
أَن لَّن يُبْعَثُوا۟ۚ
அறவே எழுப்பப்பட மாட்டார்கள்
qul
قُلْ
நீர் கூறுவீராக!
balā
بَلَىٰ
ஏன் இல்லை!
warabbī
وَرَبِّى
என் இறைவன் மீது சத்தியமாக
latub'ʿathunna
لَتُبْعَثُنَّ
நிச்சயமாகஎழுப்பப்படுவீர்கள்
thumma
ثُمَّ
பிறகு
latunabba-unna
لَتُنَبَّؤُنَّ
நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும்
bimā ʿamil'tum
بِمَا عَمِلْتُمْۚ
நீங்கள் செய்தவற்றை
wadhālika
وَذَٰلِكَ
அது
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்விற்கு
yasīrun
يَسِيرٌ
மிக எளிதானதே!
(மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர். (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அவ்வாறன்று. என் இறைவன் மீது சத்தியமாக! மெய்யாகவே நீங்கள் எழுப்பப் படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவைகளைப் பற்றி பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே." ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௭)
Tafseer

فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَالنُّوْرِ الَّذِيْٓ اَنْزَلْنَاۗ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ ٨

faāminū
فَـَٔامِنُوا۟
ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வையும்
warasūlihi
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
wal-nūri
وَٱلنُّورِ
ஒளியையும்
alladhī anzalnā
ٱلَّذِىٓ أَنزَلْنَاۚ
எதை/இறக்கினோம்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
bimā taʿmalūna
بِمَا تَعْمَلُونَ
நீங்கள் செய்பவற்றை
khabīrun
خَبِيرٌ
ஆழ்ந்தறிபவன்
ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவன் இறக்கிவைத்த (இவ்வேதமென்னும்) பிரகாசத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கறிந்தவனாக இருக்கின்றான். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௮)
Tafseer

يَوْمَ يَجْمَعُكُمْ لِيَوْمِ الْجَمْعِ ذٰلِكَ يَوْمُ التَّغَابُنِۗ وَمَنْ يُّؤْمِنْۢ بِاللّٰهِ وَيَعْمَلْ صَالِحًا يُّكَفِّرْ عَنْهُ سَيِّاٰتِهٖ وَيُدْخِلْهُ جَنّٰتٍ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَآ اَبَدًاۗ ذٰلِكَ الْفَوْزُ الْعَظِيْمُ ٩

yawma
يَوْمَ
நாளை
yajmaʿukum
يَجْمَعُكُمْ
அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்
liyawmi
لِيَوْمِ
நாளுக்காக
l-jamʿi
ٱلْجَمْعِۖ
ஒன்று சேர்க்கப்படும்
dhālika yawmu
ذَٰلِكَ يَوْمُ
அதுதான்/நாளாகும்
l-taghābuni
ٱلتَّغَابُنِۗ
ஏமாறுகின்ற
waman
وَمَن
யார்
yu'min
يُؤْمِنۢ
நம்பிக்கை கொள்வார்(கள்)
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
wayaʿmal
وَيَعْمَلْ
இன்னும் செய்வார்(கள்)
ṣāliḥan
صَٰلِحًا
நன்மையை
yukaffir
يُكَفِّرْ
போக்கிவிடுவான்
ʿanhu
عَنْهُ
அவர்களை விட்டும்
sayyiātihi
سَيِّـَٔاتِهِۦ
அவர்களின் பாவங்களை
wayud'khil'hu
وَيُدْخِلْهُ
இன்னும் அவர்களை நுழைப்பான்
jannātin
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
tajrī
تَجْرِى
ஓடும்
min taḥtihā
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
l-anhāru
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாக இருப்பார்கள்
fīhā
فِيهَآ
அவற்றில்
abadan
أَبَدًاۚ
எப்போதும்
dhālika
ذَٰلِكَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றியாகும்
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தான
ஒன்று கூட்டப்படும் (மறுமை) நாளில் அவன் உங்களை ஒன்று சேர்ப்பான். அதுதான் (பாவிகளுக்கு) நஷ்டம் உண்டாக்கும் நாளாகும். எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நற் செயல்களைச் செய்கின்றாரோ, அவருடைய பாவத்திற்கு (அவைகளைப்) பரிகாரமாக்கி, தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் அவரைப் புகுத்தி விடுகின்றான். என்றென்றுமே அதில் அவர் தங்கிவிடுவார். இதுதான் மிக மகத்தானதொரு வெற்றியாகும். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௯)
Tafseer
௧௦

وَالَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَآ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِ خٰلِدِيْنَ فِيْهَاۗ وَبِئْسَ الْمَصِيْرُ ࣖ ١٠

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்களோ
wakadhabū
وَكَذَّبُوا۟
இன்னும் பொய்ப்பித்தார்களோ
biāyātinā
بِـَٔايَٰتِنَآ
நமது வசனங்களை
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்தான்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِ
நரகவாசிகள்
khālidīna
خَٰلِدِينَ
நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள்
fīhā
فِيهَاۖ
அதில்
wabi'sa
وَبِئْسَ
அது மிகக் கெட்டதாகும்
l-maṣīru
ٱلْمَصِيرُ
மீளுமிடங்களில்
எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களோ அவர்கள் நரகவாசிகளே. அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள். அது மகா கெட்ட சேரும் இடம். ([௬௪] ஸூரத்துத் தஃகாபுன்: ௧௦)
Tafseer