குர்ஆன் ஸூரா ஸூரத்துல் முனாஃபிஃகூன் வசனம் ௪
Qur'an Surah Al-Munafiqun Verse 4
ஸூரத்துல் முனாஃபிஃகூன் [௬௩]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
۞ وَاِذَا رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْۗ وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْۗ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ ۗيَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْۗ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْۗ قَاتَلَهُمُ اللّٰهُ ۖاَنّٰى يُؤْفَكُوْنَ (المنافقون : ٦٣)
- wa-idhā ra-aytahum
- وَإِذَا رَأَيْتَهُمْ
- And when you see them
- நீர் அவர்களைப் பார்த்தால்
- tuʿ'jibuka
- تُعْجِبُكَ
- pleases you
- உம்மைக் கவரும்
- ajsāmuhum
- أَجْسَامُهُمْۖ
- their bodies
- அவர்களின் உடல்கள்
- wa-in yaqūlū
- وَإِن يَقُولُوا۟
- and if they speak
- அவர்கள் கூறினால்
- tasmaʿ
- تَسْمَعْ
- you listen
- நீர் செவியுறுவீர்
- liqawlihim
- لِقَوْلِهِمْۖ
- to their speech
- அவர்களின் கூற்றை
- ka-annahum khushubun
- كَأَنَّهُمْ خُشُبٌ
- as if they (were) pieces of wood
- அவர்கள் மரப்பலகைகளைப் போல்
- musannadatun
- مُّسَنَّدَةٌۖ
- propped up
- சாய்த்து வைக்கப்பட்ட
- yaḥsabūna
- يَحْسَبُونَ
- They think
- எண்ணுவார்கள்
- kulla
- كُلَّ
- every
- ஒவ்வொரு
- ṣayḥatin
- صَيْحَةٍ
- shout
- சப்தத்தையும்
- ʿalayhim
- عَلَيْهِمْۚ
- (is) against them
- தங்களுக்கு பாதகமாகவே
- humu
- هُمُ
- They
- அவர்கள்தான்
- l-ʿaduwu
- ٱلْعَدُوُّ
- (are) the enemy
- எதிரிகள்
- fa-iḥ'dharhum
- فَٱحْذَرْهُمْۚ
- so beware of them
- ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக!
- qātalahumu
- قَٰتَلَهُمُ
- May destroy them!
- அவர்களை அழிப்பான்
- l-lahu
- ٱللَّهُۖ
- Allah!
- அல்லாஹ்
- annā
- أَنَّىٰ
- How
- எவ்வாறு
- yu'fakūna
- يُؤْفَكُونَ
- are they deluded?
- அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்
Transliteration:
Wa izaa ra aytahum tu'jibuka ajsaamuhum wa iny yaqooloo tasma' liqawlihim kaannahum khushubum musannadah; yahsaboona kulla saihatin 'alaihim; humul 'aduwwu fahzarhum; qaatalahumul laahu annaa yu'fakoon(QS. al-Munāfiq̈ūn:4)
English Sahih International:
And when you see them, their forms please you, and if they speak, you listen to their speech. [They are] as if they were pieces of wood propped up – they think that every shout is against them. They are the enemy, so beware of them. May Allah destroy them; how are they deluded? (QS. Al-Munafiqun, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்களை நீங்கள் பார்த்தால், அவர்களுடைய தேகங்கள் உங்களை ஆச்சரியப்படுத்தும். அவர்கள் பேச ஆரம்பித்தால், அவர்களுடைய வார்த்தையையே நீங்கள் கேட்கும்படி ஏற்படும். (நீங்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது பேசுவார்கள்.) சுவற்றில் சாய்ந்த மரங்களைப்போல் அவர்கள் (அசையாது) இருப்பார்கள். (அவர்கள் செவியுறும்) எந்தச் சப்தத்தையும் தங்களுக்கு விரோதமாகப் பேசுவதாகவே எண்ணிக்கொள்வார்கள். (நபியே!) இவர்கள்தாம் (உங்களுடைய உண்மையான) எதிரிகள். ஆகவே, இவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அவர்களை அழித்துவிடுவான். (சத்தியத்திலிருந்து) அவர்கள் எங்கு செல்கின்றனர்? (ஸூரத்துல் முனாஃபிஃகூன், வசனம் ௪)
Jan Trust Foundation
இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமாண்டமாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள். ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றார்கள்!